- பூரணவள்ளி சேகர்
தன் கணவனின் இழப்பிற்குப் பிறகு குழந்தைகள் இல்லாத காரணத்தால் தனி மரமாக நின்றாள் கமலா. கமலா மிகவும் அன்பும் பொறுமையும் நிறைந்தவள். மிகவும் பொறுமையாக எந்த நிகழ்வையும் எதிர்கொள்வாள்.
தன் தாயைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு தன் காலத்தைக் கழித்தாள். வீடு சொந்தமாக இருந்தது. மேலும் ஐந்து வீடுகளின் வாடகை வந்ததினால் இருவரும் நிம்மதியாக வாழ்ந்தனர்.
தன் வாழ்நாளின் காலம் வீணாகக் கழிவதாக நினைத்த கமலா அருகில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிய விரும்பினாள். பள்ளியில் வேலையும் கிடைத்தது. பள்ளியில் மாணவர்களை மிகவும் பொறுமையாகக் கையாண்டாள் கமலா.
மாணவர்களின் அழுகை மற்றும் சேட்டைகள் ஆகியவை அவளின் பொறுமையையே சோதித்தது. பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த கமலா தன் தாயிடம் எரிந்து விழுந்தாள்.ஒரு நாள் கமலாவின் தாய் ஏன் இப்படி மாறிவிட்டாய்? என்று அனுசரனையாகக் கேட்டார்.
அது பற்றி அதிகமாக யோசனை செய்தாள் கமலா. மறுநாள் பள்ளி முதல்வரைச் சந்திக்கச் சென்ற கமலாவை முதல்வர் மனம் திறந்து பாராட்டினார். கமலாவின் பணி பற்றி அனைவரிடமும் புகழ்வதாகக் கூறினார்.

முதல்வரின் பாராட்டைக் கேட்ட கமலா மகிழ்வுடன் நன்றி கூறிவிட்டுத் தன் ராஜினாமா கடிதத்தை நீட்டினாள். அதிர்ந்த பள்ளி முதல்வரிடம் இங்கே காட்டும் பொறுமை வீட்டிற்குச் சென்றதும் கட்டுப்படுத்த முடியாத கோபமாக வெளிப்படுகிறது என்பதை விளக்கினாள்.
உலகில் தனக்கென உள்ள தன் தாய் தனக்கு மிகவும் முக்கியம் என்று கூறினாள் கமலா.
(ப.பூரணவள்ளி சேகர், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்)
கீழ்வானம் செந்நிற ஆடை அணிய.... மலர்கள் சோம்பல்முறிக்க...!
திருமலை குமாரசுவாமி திருக்கோவில்.. குன்றின் மீதமர்ந்து.. அருள் பாலிக்கும் முருகப் பெருமான்!
"நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்".. கதை அல்ல நிஜம் (2வது பகுதி)
Puzzle: அந்தாதி வினா விடை.. வர்றீங்களா விளையாடலாம்?
Story by Pooranavalli Sekar: பொறுமை.. ஒரு நிமிடக் கதை (20)
Short Story: மாயமான மாண்புமிகு!
என் கூற்று பொய்யும் அல்ல மிகையும் அல்ல!
Holy Purattasi: புண்ணியம் தரும் புரட்டாசி!
யாருக்கு வேண்டும் பொறுப்பு?
{{comments.comment}}