பூமியைத் தாக்கிய அதி தீவிர சூரியப் புயல்.. பல பகுதிகளில் மின் கட்டமைப்பு, தகவல் தொடர்புகள் பாதிப்பு

May 11, 2024,05:09 PM IST

வாஷிங்டன்: கடந்த 20 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் சக்தி வாய்ந்த சூரியப்புயல் பூமியைத் தாக்கியுள்ளது. இதனால் பல நாடுகளில் மின் கட்டமைப்புகள், தகவல் தொடர்பு கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


டாஸ்மானியா முதல் இங்கிலாந்து வரை இந்த சூரியப் புயலை ஒளிக் கதிர் வீச்சுக்களாக மக்கள் பார்த்துள்ளனர். இந்த சூரியப் புயலால் செயற்கைக் கோள்களுக்கும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.


கிரீன்வீச் நேரப்படி  வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு இந்த சூரியப் புயலானது பூமியைத் தாக்கத் தொடங்கியது.  இது முதலில் சாதாரணமாகத்தான் இருந்தது. ஆனால் அதன் பின்னர் இது அதி தீவிரத் தாக்குதலாக இதை விஞ்ஞானிகள் வர்ணித்தனர். இந்த சூரியப்புயலால், கடந்த 2003ம் ஆண்டு ஸ்வீடனில் மிகப் பெரிய மின் வெட்டு ஏற்பட்டு நாடே இருளில் மூழ்கியது.  அதேபோல தென் ஆப்பிரிக்காவிலும் மின் கட்டமைப்புகள் சேதமடைந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தின என்பது நினைவிருக்கலாம்.  வரும் நாட்களில் இதுபோன்ற நிலை இப்போதும் ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது.




இதற்கிடையே, வடக்கு ஐரோப்பா, ஆஸ்திரேலசியா ஆகிய நாடுகளில் வானில் வெடித்துக் கிளம்பிய சூரியக் கதிர் வீச்சை மக்கள் கண்டு களித்து மகிழ்ந்தனர். பிரமாண்டமான வான வேடிக்கை போல இது இருந்தது. வெறும் கண்களாலேயே இதைக் காண முடிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இயற்கையின் விந்தை இதுதான்!


இதற்கிடையே, சூரியல் புயல் காரணமாக செயற்கைக் கோள்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுமாறு அனைத்து நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல  விமானங்களையும் பாதுகாப்பாக இயக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது சூரியனிலிருந்து வெளியாகும் கதிர் வீச்சானது விநாடிக்கு 800 கிலோமீட்டர் என்ற  வேகத்தில் வருவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

தீஞ்ச சக்தியிலிருந்து ஆட்களை இழுக்கும் நீங்க என்ன.. காஞ்சு போன சக்தியா? .. மு.க. ஸ்டாலின் தாக்கு

news

KG முதல் PG வரை இலவச கல்வி.. ஒடிசா அதிரடியை எல்லோரும் கடைப்பிடிக்கலாமே?

news

தவெக.,வை நோக்கி படையெடுக்கும் மாற்று கட்சியினர்... பலமா? பலவீனமா?

news

டீசல் விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு: மத்திய அரசு அதிரடி உத்தரவு!

news

Vijay Birthday: முதல்வராக முதல் முறையாக.. 52வது பிறந்த நாளைக் கொண்டாடத் தயாராகும் விஜய்

news

அதிமுக தேர்தல் தோல்வி எதிரொலி: மாவட்ட வாரியாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

news

பாஜவிலிருந்து விலகி தவெகவில் இணைகிறார் முன்னாள் எம்.எல்.ஏ விஜயதரணி

news

லியோனல் மெஸ்ஸியின் உலகக் கோப்பை வேட்டை எப்போது தொடங்குகிறது?

news

Seven Days, Twenty Kilometres.. மற்றும் மறக்க முடியாத சில நினைவுகள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்