சென்னை: பிரஷாந்த் நடித்துள்ள அந்தகன் படத்தின் முதல் பாடலை நடிகரும், த.வெ.க தலைவருமான விஜய் வரும் 24ம் தேதி வெளியிடுவார் என படக்குழு அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
டாப் நடிகர்களுள் ஒருவராக வலம் வந்தார் பிரஷாந்த் . சில ஆண்டுகள் சினிமாவின் பக்கம் வராமல் இருந்தார். இந்த நிலையில் விஜய்யுடன் இணைந்துள்ளார் பிரஷாந்த். நீண்ட இடைவேளைக்கு பிறகு, பிரபுதேவா, பிரஷாந்த், விஜய் ஆகிய மூவரும் இணைந்து நடித்துள்ள படம் தான் தி கோட். இவர்களுடன் சினேகா, லைலா, வைபவ், பிரேம்ஜி, மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார். நடிகை த்ரிஷா இப்படத்தில் கெளரவ தோற்றத்தில் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. வெங்கட் பிரபு இப்படத்தை இயக்கியுள்ளார்.
தி கோட் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து தற்போது இறுதி பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம் வரும் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு அஸ்திவாரம் போடப்பட்ட அந்தகன் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்தியில் பெரும் வரவேற்பை பெற்ற அந்தாதூன் படத்தை தமிழில் ரீமேக் செய்துள்ளனர். அதுதான் அந்தகன்.

பிரஷாந்த்தின் தந்தை தியாகராஜன் தயாரித்து, இயக்கியுள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளராக ரவியாதவ், கலை இயக்குநராக செந்தில் ராகவன் ஆகியோர் பணிபுரிந்துள்ளானர்.
இதில் ஆயுஷ்மான் குராணா கதாபாத்திரத்தில் பிரஷாந்த் நடித்துள்ளார். நாயகியாக ப்ரியா ஆனந்த், சிம்ரன், கார்த்திக், யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ்.ரவிக்குமார், மனோபாலா, வனிதா விஜயகுமார், செம்மலர், பூவையார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், பல்வேறு காரணங்களால் படம் வெளிவராமல் உள்ளது.
இப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளிவரும் என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடலான அந்தகன் ஆந்தம் பாடலை ஜூலை 24ம் தேதி நடிகர் விஜய் வெளியிடுவார் என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பாடலுக்கான வரிகளை உமாதேவி எழுதியுள்ளார். சான்டி மாஸ்டர் நடனம் கற்பித்துள்ளார். பாடலை அனிருத் மற்றும் மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி இணைந்து பாடியுள்ளனர். பிரபுதேவா இந்தப் பாடலை வடிமைத்து இயக்கியுள்ளார்.
போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி
தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!
மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!
தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!
தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!
{{comments.comment}}