வாஷிங்டன்: One Big and Beautiful bill என்று அதிபர் டொனால்ட் டிரம்ப்பால் வர்ணிக்கப்பட்ட வரி மற்றும் செலவு மசோதாவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
வெள்ளை மாளிகையில் சுதந்திர தின விழா நடந்தபோது இந்த மசோதா கையெழுத்தானது. விழாவில் ஒரு ஸ்டெல்த் போர் விமானம் பறந்து சென்றது. "அமெரிக்கா முன்னெப்போதும் இல்லாத வகையில் வெற்றி பெற்று வருகிறது" என்றும் டிரம்ப் கூறினார்.
குடியரசுக் கட்சி எம்.பிக்கள் புடை சூழ, மசோதாவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். இந்த மசோதா சமூக நலத்திட்டங்களில் பெரும் செலவுக் குறைப்புகளை ஏற்படுத்தி பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஜனநாயகக் கட்சியினர் விமர்சித்துள்ளனர். ஆனால், அதை நிராகரித்துள்ளார் அதிபர் டிரம்ப்.

டிரம்ப்பின் முதல் ஆட்சியில் இருந்த வரி குறைப்புகளை நீட்டிப்பது, இராணுவ செலவினங்களை அதிகரிப்பது மற்றும் குடியேற்ற முயற்சிகளுக்கு புதிய நிதியை ஒதுக்குவது உள்ளிட்ட அவரது முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை இந்த மசோதா நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளது.
அதேசமயம், இந்த மசோதா அமெரிக்காவில் ஒரு பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது. டிரம்ப் ஆதரவாளர்கள் இது பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று கூறுகின்றனர். எதிர்ப்பாளர்கள் இது சமூக சமத்துவமின்மையை அதிகரிக்கும் என்று வாதிடுகின்றனர். அதிபர் டிரம்ப்பின் நண்பரான எலான் மஸ்க்கே இந்த சட்டத்தை எதிர்த்துள்ளார். இது அமெரிக்காவை திவாலாக்கி விடும், கடன் சுமையை அதிகரித்து விடும் என்று அவர் விமர்சித்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
இந்த மசோதாவின் தாக்கம் காலப்போக்கில் தெளிவாகத் தெரியும். இந்த மசோதாவில் கையெழுத்திட்ட பிறகு, டிரம்ப் இராணுவ வீரர்களுடன் ஒரு சிற்றுண்டி விருந்தில் கலந்து கொண்டார். அவர் தனது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அமெரிக்காவின் எதிர்காலம் குறித்து நம்பிக்கையும் தெரிவித்தார்.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}