டில்லி : குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களிடையே குடியரசு தின உரையை நிகழ்த்தி உள்ளார். 77-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, தேசத்தைக் கட்டியெழுப்புவதில் குடிமக்களின் பங்களிப்பைப் போற்றி குடியரசுத் தலைவர் ஆற்றிய உரையின் விபரம் இதோ...
நாட்டின் 77வது குடியரசு தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றி உள்ளார். அவர் தனது உரையில், "நமது அரசியலமைப்பில் பொறிக்கப்பட்டுள்ள நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய லட்சியங்களே நமது குடியரசை வரையறுக்கின்றன. அரசியலமைப்பை உருவாக்கியவர்கள், அதன் சட்டப்பிரிவுகள் மூலம் தேசியவாத உணர்வுக்கும் நாட்டின் ஒற்றுமைக்கும் வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளனர்.
சிறந்த தேசியக் கவிஞரான சுப்பிரமணிய பாரதியார், 'வந்தே மாதரம் என்போம்' என்ற பாடலைத் தமிழ் மொழியில் இயற்றி, வந்தே மாதரம் என்ற தாரக மந்திரத்தை மக்களிடையே மிகப்பெரிய அளவில் கொண்டு சென்றார். இந்தப் பாடலின் பிற மொழிபெயர்ப்புகளும் மிகவும் பிரபலமானவை. ஸ்ரீ அரவிந்தர் இப்பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். பங்கிம் சந்திர சட்டோபாத்யாயால் உருவாக்கப்பட்ட 'வந்தே மாதரம்' நமது தேசத்தின் இதயம் கனிந்த பிரார்த்தனை பாடலாகும்.

ஜனவரி 23 அன்று நேதாஜியின் பிறந்தநாளை நாடு 'பராக்ரம் திவாஸ்' (வீர தினம்) எனக் கொண்டாடியது. இளைஞர்கள் அவரது தேசபக்தியிலிருந்து ஊக்கம் பெற வேண்டும். அவரது 'ஜெய் ஹிந்த்' என்ற முழக்கம் நமது தேசிய பெருமிதத்தின் பிரகடனம். நமது நாட்டுப் பெண்கள் பாரம்பரியத் தடைகளை உடைத்து முன்னேறி வருகின்றனர். விவசாயம் முதல் விண்வெளி வரை, சுயவேலைவாய்ப்பு முதல் ஆயுதப்படை வரை அனைத்துத் துறைகளிலும் முத்திரை பதித்து வருகின்றனர். குறிப்பாக விளையாட்டுத் துறையில் நமது மகள்கள் உலகளாவிய சாதனைகளைப் படைத்துள்ளனர் (மகளிர் கிரிக்கெட் மற்றும் செஸ் போட்டிகளைக் குறிப்பிட்டுப் பாராட்டினார்)."
நாட்டின் முன்னேற்றத்திற்குப் பங்காற்றும் பல்வேறு தரப்பினருக்குக் குடியரசுத் தலைவர் நன்றி தெரிவித்தார். எல்லைகளைப் பாதுகாக்கும் வீரர்கள் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்யும் காவல்துறை. உணவு வழங்கும் விவசாயிகள். மக்களின் ஆரோக்கியத்தைக் காக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள். தூய்மைப் பணியாளர்கள், ஆசிரியர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள். சிக்கிள் செல் அனீமியா (Sickle Cell Anaemia) ஒழிப்புத் திட்டம் மற்றும் ஏகலைவா மாதிரிப் பள்ளிகள் மூலம் பழங்குடியின சமூகங்களின் கல்வி மற்றும் ஆரோக்கியத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது பாரம்பரியத்தையும் நவீன வளர்ச்சியையும் இணைக்கும் பாலமாக அமைகிறது என தெரிவித்துள்ளார்.
மக்களின் உழைப்பால் வளர்ச்சி அடைந்த இந்தியா சாத்தியம்...குடியரசு தின உரையில் ஜனாதிபதி பேச்சு
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
{{comments.comment}}