வாஷிங்டன்: அமெரிக்காவில் ஹெலிகாப்டர் மற்றும் விமானம் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதற்கு காரணம் முந்தைய ஆட்சியாளர்களே காரணம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் வானில் பறந்து கொண்டிருந்த விமான மற்றும் ஹெலிகாப்டர் நேருக்கு நேர் மோதிக் கொண்டு போடோமேக் ஆற்றில் விழுந்து விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்தில் சிக்கி ஹெலிகாப்டரில் இருந்த 3 ராணுவ வீரர்கள், விமானத்தில் இருந்த மூன்று பணியாளர்கள் மற்றும் 60 பயணிகள் என மொத்தம் 67 பேர் உயிரிழந்தனர். இதுவரை 28 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஹெலிகாப்டரும் விமானமும் மோதி ஆற்றில் விழுந்த பயணிகளையும் மீட்க அந்நாட்டு அரசு மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளது. அதேபோல் இந்த விபத்திற்கு காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிஎஸ்ஏ ஏர்லைன்ஸூக்கு சொந்தமான விமானம் ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற போது இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியானது. ஆனால் இந்த விபத்து குறித்து அமெரிக்க அரசு தகவல் வெளியிடாமல் மௌனமாகவே இருந்தது.
இந்த நிலையில் தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப் விமான விபத்திற்கு காரணம் முந்தைய ஆட்சியாளர்களே என குற்றம் சாட்டியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம் குறைந்த தகுதி வாய்ந்த பணியாளர்களை பணியமர்த்த வழிவகுத்ததே இந்த விபத்துக்கு காரணம். நான் பாதுகாப்பிற்கு முதலிடம் கொடுக்கிறேன். ஒபாமா, பைடன் மற்றும் ஜனநாயகக் கட்சியினர் கொள்கைக்கு முதலிடம் கொடுத்தனர் என கூறியுள்ளார் டிரம்ப்.
கவுண்டமணி நடிச்ச ஒரு படத்தில் ஒரு வசனம் வரும்.. எல்லாத்தையும் மேல இருக்கிறவன் பார்த்துக்குவான் அப்படின்னு.. அந்த மாதிரி, தற்போது நடக்கும் தவறுகளுக்கு இதுக்கு முன்னாடி இருந்தவங்கதான் காரணம் என்று இந்திய அரசியல்வாதிகள் மாதிரி டிரம்ப் பேச ஆரம்பித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
SIR-க்கு எதிராக ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டியது நமது கடமை.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
அடிப்படை ஜனநாயக உரிமையைக் கேள்விக்கு உள்ளாக்கும் சிறப்புத் தீவிரத் திருத்தம்.. தவெக
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியே SIR.. விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு
SIR பணிகளை நிறுத்த வேண்டும்.. இல்லாவிட்டால் வழக்குத் தொடர்வோம்.. அனைத்துக் கட்சிக் கூட்டம் தீர்மானம்
தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!
ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு
அரசின் தோல்விக்காக.. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி
மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை திணிக்கிறது...சித்தராமைய்யா காட்டம்
திமுகவிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்போம்.. 2026ல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம்: தவெக தலைவர் விஜய்
{{comments.comment}}