மும்பை: இந்தியாவில், கடல் மீது கட்டப்பட்ட பாலங்களிலேயே இதுதான் மிக நீளமானது. அந்தப் பெருமையைப் பெற்றுள்ளது, மும்பை - நவி மும்பை இடையே அமைக்கப்பட்டுள்ள 22 கிலோமீட்டர் தொலைவிலான அடல் சேது எனப்படும் கடல் பாலம். இந்தப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார்.
மும்பையிலிருந்து ஒருவர் நவி மும்பை பகுதிக்குச் செல்ல வேண்டுமானால் தற்போது குறைந்தது 2 மணி நேரமாகும். கூட்ட நெரிசல், சாலைப் போக்குவரத்து ஹெவியாக இருந்தால் இன்னும் அது கூடும். இப்படிப்பட்ட நிலையில் மும்பை - நவி மும்பைக்கு எளிதாக வந்து செல்வதற்காக புதிய கடல் பாலம் திட்டமிடப்பட்டு தற்போது அது ரெடியாகி விட்டது. அடல் சேது என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாலத்தை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார்.
ரூ. 17,480 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த அதி நவீன பாலம் 22 கிலோமீட்டர் தொலைவிலானது. இந்தியாவிலேயே, கடல் மீது இவ்வளவு நீளமான தொலைவுக்கு பாலம் அமைக்கப்பட்டிருப்பது இங்குதான். இந்த பாலத்தின் வாயிலாக, மும்பை - நவி மும்பை இடையிலான பயண நேரம் வெறும் 20 நிமிடமாக குறையப் போகிறது.

இந்தப் பாலத்தில் செல்ல சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
- நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமே இதில் செல்ல முடியும்.
- மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் மட்டும்தான் செல்ல வேண்டும்.
- பாலத்தில் ஏறும் போதும், இறங்கும் போதும் மணிக்கு 40 கி.மீ வேகத்தில் தான் பயணிக்க வேண்டும்.
- விபத்து ஏற்படாமல் இருக்க வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.
- பைக், ஆட்டோ, டிராக்டர்கள் இந்த பலத்தில் செல்ல அனுமதி இல்லை.
அதாவது அதி வேகமான வாகனப் போக்குவரத்துக்காக இது திட்டமிடப்பட்டுள்ளதால், பைக், ஆட்டோ போன்றவற்றுக்கு இப்போதைக்கு அனுமதி இல்லை.
2027 ஜனவரி முதல் மதுரை எய்ம்ஸ் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்கும்: மத்திய அரசு தகவல்
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது...எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்
பள்ளி அங்கீகார மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் நாளை விசாரணை
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் 2026: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
அரசிதழில் பெயரை மாற்றி திமுக எம்.பி., கனிமொழி...இனி இது தான் இவர் பெயர்
ஓங்கி ஒலித்த நிர்மலா சீதாராமன்.. ஓர் அற்புதமான நினைவுச் சுவடு!
ஆண்டுகள் பதினேழு ஆன பின்பு மீண்டுமொரு புனிதக் குளியல்.. மாமதுரை குடமுழுக்கு!
புரட்டாசி மாதத்தில் அசைவம் தவிர்க்க வேண்டும்.. காரணம் அறிவியலா.. ஆன்மீகமா?
Madurai Sourashtra recipe: சத்தான சுவையான.. கறுப்பு முழு உளுந்து சுண்டல்!
{{comments.comment}}