புதுச்சேரி: லோக்சபா தேர்தல் எப்போது வரும் என்று இன்னும் தேதி அறிவிக்கப்படவில்லை. ஆனால் புதுச்சேரியில் பாஜக சார்பில் டிஜிட்டல் வேன் பிரச்சாரம் இன்று முதல் தொடங்கியுள்ளது.
இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளது. அதற்கு பாஜக பல விதங்களிலும் தயாராகி வருகிறது. தேர்தலுக்கு முன்பு தான் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றான ராமர் கோவிலை கட்டி முடித்து விட்டது. இதோ திறப்பு விழாவும் வந்து விட்டது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி 11 நாள் விரதத்தையும் தொடங்கி விட்டார். ஜனவரி 22ம் தேதி ராமர் கோவிலில் சிலை பிரதிஷ்டை நடைபெறவுள்ளது. இந்த விழா, பாஜகவின் தேர்தல் பிரசாரத்தில் மிகப் பெரிய துருப்புச் சீட்டாக இருக்கும் என்று அக்கட்சி நம்புகிறது.

இந்த நிலையில், புதுச்சேரி பாஜக சார்பில் அதிரடியான பிரச்சாரம் இன்று முதல் தொடங்குகிறது. பிரதமர் நரேந்திர மோடி அரசின் சாதனைகளை விளக்கும் நவீன டிஜிட்டல் வேன் ரெடியாகியுள்ளது. ரூ. 25 லட்சம் பொருட் செலவில் இந்த வேன் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்த திட்டங்கள், அதனால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பலன்கள், யார் யாருக்கு எந்தெந்த திட்டம் என்ற விவரம் விரிவாக விளக்கி வீடியோ காட்சியாக இடம் பெற்றுள்ளது.

இந்த டிஜிட்டல் வேனை புதுச்சேரி மற்றும் காரைக்கால் முழுக்க அனுப்பி மக்களிடையே பாஜக அரசின் சாதனைகளை கொண்டு செல்ல பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த வேனை அமைச்சர் நமச்சிவாயம் இன்று தொடங்கி வைக்கவுள்ளார்.
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
வழிகாட்டி தேவதை.. ஒரு நிமிடக் கதை (16)
கடைசி வரை மூக்கு கண்ணாடியே கிடையாது.. ஸ்ரீ உ.வே. குப்புசாமி அய்யங்கார்!
பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்.. குலச்சிறை நாயனார் !
தமிழுக்கு ஓர் இழப்பு!
ரீல்ஸ் மோகம்!
{{comments.comment}}