முதல்வர் மு க ஸ்டாலின், ராகுல் காந்தி.. கோவையில் இன்று.. ஒரே மேடையில் பிரச்சாரம்!

Apr 12, 2024,11:29 AM IST

கோயம்புத்தூர்: கோவையில் முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஒரே மேடையில் இந்திய கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிக்க உள்ளனர்.


லோக்சபா தேர்தல் நடைபெற இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் தேசிய கட்சிகள்  பிரச்சாரம் செய்ய தமிழ்நாடு நோக்கி படை எடுத்து வருகின்றன.


இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நெல்லையில் தீவிர பிரச்சாரம் செய்ய உள்ளார். இதற்காக டெல்லியில் இருந்து சிறப்பு விமான மூலம்  ராகுல் காந்தி திருவனந்தபுரம் செல்கிறார்.  அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் நெல்லை பாளையங்கோட்டைக்கு 3:50 மணிக்கு வருகிறார். பின்னர்   பெல் மைதானத்தில் நான்கு மணி அளவில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற வேட்பாளரரை ஆதரித்து பேச இருக்கிறார். நெல்லையில் நடைபெறும் பிரச்சாரத்தை முடித்துவிட்டு மீண்டும் திருவனந்தபுரம் செல்கிறார் ராகுல் காந்தி.




இரவு 7 மணி அளவில் திருவனந்தபுரத்திலிருந்து கோவைக்கு வருகிறார். கோவையில் ஏற்கனவே பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி இருவரும் இணைந்து பிரச்சாரம் செய்ய இருக்கின்றனர். அங்கு முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி ஒரே மேடையில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து தீவிர வாக்கு சேகரிக்க உள்ளனர். இதற்காக 2 லட்சம் பேர் அமரும் வகையில் மிகப் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. 


காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தொடர்ந்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர்  தமிழ்நாட்டிற்கு பிரச்சாரம் செய்ய வர இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சார‌ம் களைகட்டி வருகிறது.


பாதுகாப்பு அதிகரிப்பு:


காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நெல்லை மற்றும் கோவைக்கு பிரச்சார மேற்கொள்ள வருவதை ஒட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி செல்லும் சாலையில் மக்களின் கூட்டத்தை முறைப்படுத்த இருபுறமும் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்