சென்னை: மயிலாடுதுறை, நாகை, ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கும் முன்னர் இருந்தே வெயில் சுட்டெரித்து வருவதால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். வெயில் தாக்கல் அதிகம் என்பதால், என்ன செய்வது என்று தெரியாமல் மக்கள் திகைத்துள்ளனர். பல மாவட்டங்களில் வெயில் 100 பாரன்ஹீட்டை தாண்டி கொளுத்தி வருகிறது. இந்நிலையில், மக்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக சென்னை வானிலை மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது,
இன்று 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த கோடையில் வந்த இந்த அறிவிப்பால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே சில மாவட்டங்களில் கோடை மழை பெய்துள்ளதால் அங்கு வெப்பம் சற்று தணிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால், குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடை மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யக்கூடும்.
மேலும், சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் தெற்கு கேரளா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.இந்நிலையில், தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களின் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறை, நாகை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, கன்னியாகுமரியில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய லேசானதும் முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . மேலும் புதுச்சேரி காரைக்கால் பகுதியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.இந்த செய்தியால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கிடையே அடுத்த 5 நாட்களில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழையை எதிர்பார்க்கலாம் என தனியார் வானிலை ஆய்வளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}