ஜெய்ப்பூர்: அயோத்தியில் நாளை மறுநாள் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் ஜனவரி 22ம் தேதி இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் முக்கிய நிகழ்வாக தற்போது அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நாடு முழுவதும் ஏகப்பட்ட செயல்பாடுகள் களை கட்டியுள்ளன. ராமர் கோவில் திறப்பு விழாவிற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு உத்தரவுகைளை பிரப்பித்து வருகின்றன. பல முன்னேற்பாடுகளும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
பல ஆண்டுகளாக சட்ட போராட்டம் நடத்தப்பட்டு வந்த அயோத்தி ராமர் கோவில் பிரச்சனைக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கி முற்றுப்புள்ளி வைத்தது. அதன் பின்னர் மத்திய அரசு அனுமதியுடன் ராமர் கோவில் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. தற்போது ஜனவரி 22ம் தேதி மிகப் பிரம்மாண்ட அளவில் கோவில் திறப்பு விழா நடைபெற உள்ளது. பால ராமர் சிலை அங்கு நிறுவப்படவுள்ளது.
இந்த திறப்பு விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா மற்றும் முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், முன்னணி நட்சத்திரங்கள் என பல்வேறு துறைகளை சார்ந்த பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். முக்கிய பிரமுகர்கள் வருகையையொட்டி அயோத்தி முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ராமர் கோவில் திறப்பையொட்டி மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை, கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை, 9000 ரயில் நிலையங்களில் திறப்பு விழா நேரடி காட்சிகள், மதுக்கடைகளுக்கு விடுமுறை என மத்திய மற்றும் பாஜக - கூட்டணி கட்சிகள் ஆளும் மாநில அரசுகள் அறிவி்த்துள்ளன.
அந்த வகையில் சமீபத்தில் ராஜஸ்தானில் ஆட்சியமைத்த பாஜக அரசு, தற்போது அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு மாநிலத்தில் உள்ள இறைச்சி கடைகளை ஜனவரி 22ம் தேதி திறக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினம் இறைச்சிக் கடைகள் செயல்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
CSK-விலிருந்து அஸ்வின் வெளியேறப் போகிறாரா.. சஞ்சு சாம்சன் உள்ளே நுழையப் போகிறாரா?
தேமுதிகவில் என்ன நடக்கிறது?.. பிரேமலதாவுடன் கே.சி. வீரமணி சந்தித்தது எதற்காக??
தானே முதல்வர் வேட்பாளர்.. அதிமுகவுடன் கூட்டணி இல்லை.. விஜய் புரட்சி படைப்பார்.. இந்தியா டுடே தகவல்!
ராமதாஸ், அன்புமணி நேரில் வாங்க.. தனியாக பேச வேண்டும்.. நீதிபதி உத்தரவு.. அடுத்தது என்ன?
தவெக மாநாட்டிற்கு கூட்டம் சேர்ந்தால் என்ன நடக்கும்.. யாருக்கு லாபம்.. யாருக்கு நஷ்டம்?
BREAKING: 11ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து.. இந்த ஆண்டே அமல்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
டெல்லியில் ஷாக்கிங்.. பார்க்கிங்கில் தகராறு.. நடிகை ஹூமா குரேஷியின் உறவினருக்கு நேர்ந்த விபரீதம்
டிரம்ப் வரி எதிரொலி.. இந்திய ஆடைகளை வாங்கவதை நிறுத்தி வைக்கும் அமேசான், வால்மார்ட்
ஆகஸ்ட் 12ல் தாயுமானவர் திட்டம் துவக்கம்...யாருக்கு இந்த திட்டம்?
{{comments.comment}}