என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)

Jun 09, 2026,04:33 PM IST

- ரதிதேவி


போதும் மதன் 


என்னால ஃப்ரீயா பேச முடியல 


ஒகே ரதி...

நான் இந்த தெருவில் கொஞ்ச தூரம் போனதும் நீ பின்னாடி வா ...ஒகே வா ....


ம் .. மதன்...

மதன் செல்ல .. பின்னாடி ரதி போனாள் ..கொஞ்ச தூரம் போனதும் மதன் ஓர் வீட்டின் அருகே நின்றதும்..... ரதி கொஞ்சம் தள்ளி மறைவாக நின்று கொண்டாள்.


மதன் ஓர் பெயர் சொல்லி கூப்பிட .. ஓர் பெண் வெளியே வந்தாள்... யாரு என்று கேட்டுக் கொண்டே வந்தவள்.. வாசலில் மதனைப் பார்த்ததும் திகைத்து போனாள்...


நீங்கள்.... இங்க... என்னாச்சு... இங்க வந்து இருக்கீங்க...


நீ தான்.. என்னை இங்கு வர வைச்சுட்ட....


நேற்று.. ரதித்கிட்ட என்ன சொன்ன....


நான ஒன்னும் சொல்லலை...


நீ சொல்லாமலா . அவள் என்கிட்ட கோபப்பட்டு பேசவே இல்லை.உனக்கு என்ன தான் வேணும்...




என்னை வேணாம் னு சொல்லி இந்த குடிகாரனைக் காதலிச்சுட்டு ...கல்யாணத்தையும் பண்ணிட்டு ...இப்ப இவன் கூட வாழ பிடிக்கலை ...என்பதற்காக என்னையும் வேற கல்யாணத்தையும் பண்ணவிடாம..... டார்ச்சர் பண்ற....


இங்க பாரு ..ரதி என் உயிர்... அவளுக்கு நான் புரிய வைப்பேன்.. கண்டிப்பாக அவள் என்னை புரிஞ்சி ப்பா... இன்னொரு தடவை என் காதலுக்கு குறுக்கே வந்த ... அப்புறம் நீ தான் கஷ்டபடுவ ....


என்ன மதன் மிரட்டுறியா ...

என்ன தவிர யாரையும் உன் கூட வாழ விட மாட்டேன்..... ரதியும் நீ சொல்றத நம்ப மாட்டாள்....


அப்படியா .... நான் சொன்னா நம்ப மாட்டாள்... நீ சொன்னத நம்புவாளா .....


என்ன சொல்ற ....


ரதி இங்கே வா ....

மறைந்து நின்ற ரதியைப் பார்த்ததும் வாயடைத்து போய் நின்றாள்.....


என்ன..... நீ இவனோடே குப்பை கொட்டு ...


ரதி போகலாமா ...


ம் . மதன்....


ஸாரி மதன்...


பரவாயில்லை மதன்... உன் மேல தப்பு இல்லை...


ரதி ...


ம்..


ஐ லவ் யு ...


ம்


என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா.....

இங்கே பாரு ரதி ....

ரதியின் நாடியைப் பிடித்து தூக்க ....


ரதியின் விழிகளின் ஓரம் நின்ற துளிகளைக் கண்ட மதன்.....


இதயம் நொறுங்கி போய்...


ரதி ஏன்....என்று .. அவன் தன் கரங்களால் துளிகளைத் துடைக்க ....


ரதி தன் கரங்களால் மதனை இறுக்க அணைத்து ஆனந்த கண்ணீரில் மிதக்க ...

மதன்..... ரதியின் கறுங்கூந்தலைத் தடவி ...


ஐ லவ் யூ ரதி ....


ம் ம்... ஐ லவ் யூ மதன்..


இரு இதயங்களும் இணைந்து....

ஆனந்த களிப்புற்றன!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்