உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு...ஆர்சிபி அறிவிப்பு

Aug 30, 2025,11:09 AM IST

பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த துயரமான கூட்ட நெரிசலில் உயிரிழந்த 11 குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கப்படும் என்று RCB அறிவித்துள்ளது. இது வெறும் நிதி உதவி மட்டுமல்ல, இரக்கம், ஒற்றுமை மற்றும் அக்கறையின் வாக்குறுதி என்றும் RCB சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது. 


ஐபிஎல் வெற்றிக்குப் பிறகு சின்னசாமி ஸ்டேடியத்தில் RCB கொண்டாட்டம் நடத்தியது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். 56 பேர் காயமடைந்தனர். RCB, 84 நாட்களாக சமூக வலைத்தளத்தில் எதுவும் பதிவிடாமல் இருந்தது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த துயரமான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி 25 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது. RCB Cares என்ற புதிய திட்டத்தின் மூலம் இந்த உதவி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இரக்கம், ஒற்றுமை மற்றும் தொடர் ஆதரவை வழங்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. 




RCB அணி வெளியிட்ட அறிக்கையில், "RCB குடும்பத்தின் 11 உறுப்பினர்களை நாங்கள் இழந்தோம். அவர்கள் எங்களுடையவர்கள். இந்த நகரத்தையும், சமூகத்தையும், அணியையும் தனித்துவமாக்கியதில் அவர்களுக்கும் பங்குண்டு. அவர்களின் இழப்பு எங்கள் ஒவ்வொருவரின் நினைவுகளிலும் எதிரொலிக்கும்" என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், "எந்த உதவியும் அவர்கள் விட்டுச்சென்ற இடத்தை நிரப்ப முடியாது. இருப்பினும், முதல் கட்டமாக, RCB அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் வழங்குகிறது. இது வெறும் நிதி உதவி மட்டுமல்ல, இரக்கம், ஒற்றுமை மற்றும் தொடர் அக்கறையின் வாக்குறுதி" என்றும் தெரிவித்துள்ளது. "இது 𝗥𝗖𝗕 𝗖𝗔𝗥𝗘𝗦 திட்டத்தின் ஆரம்பம். இது அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் அர்த்தமுள்ள நடவடிக்கைகளுக்கான நீண்ட கால அர்ப்பணிப்பு. ஒவ்வொரு அடியும் ரசிகர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும்" என்றும் RCB குறிப்பிட்டுள்ளது.


இந்த துயர சம்பவத்திற்குப் பிறகு, கர்நாடக அரசு உயர் நீதிமன்றத்தில் ஒரு அறிக்கை சமர்ப்பித்தது. அதில், RCB நிர்வாகம், நிகழ்வு மேலாண்மை பங்குதாரரான DNA Networks Private Limited மற்றும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் ஆகியவை காவல்துறையிடம் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக வெற்றி விழாவை நடத்த முடிவு செய்ததாகக் கூறியது. மேலும், விழாவிற்கான தேவையான அனுமதிகள் மற்றும் உரிமங்கள் பெறப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.


நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா கமிஷன் கர்நாடக அரசுக்கு ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், சின்னசாமி ஸ்டேடியத்தின் வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பு காரணமாக பெரிய அளவிலான நிகழ்வுகளை நடத்த பாதுகாப்பற்றது என்று கூறியது. இதன் காரணமாக மகளிர் உலகக் கோப்பை போட்டிகள் இந்த மைதானத்தில் இருந்து மாற்றப்பட்டன.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கருப்புக் கொடி காட்டிய.. பாஜக இளைஞர் அணியினரை அருகே அழைத்து.. மிட்டாய் கொடுத்த ராகுல் காந்தி

news

காட்டில் புலிகள் நுழைந்தவுடன் ஒரு அணிலை கூட காணவில்லை: மரங்கள் மாநாட்டில் தவெகவை தாக்கி பேசிய சீமான்

news

சஞ்சு சாம்சன் போவாருன்னு பார்த்தா.. ராகுல் டிராவிட் ராஜிநாமா.. என்ன நடக்குது?

news

அண்ணாமலை மற்றும் தவெக குறித்து விமர்சிக்க வேண்டாம்: அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அறிவுறுத்தல்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே... சொன்னீங்களே செஞ்சீங்களா ?: நயினார் நாகேந்திரன் கேள்வி!

news

ஒரே மேடையில் அண்ணாமலை- இபிஎஸ்: எனது சகோதரர் அண்ணாமலை-இபிஎஸ்!

news

என்ன நடக்கிறது... கூட்டணி மாறுகிறதா?... தேஜ கூட்டணி தலைவர்களுடன் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ்!

news

இந்தியப் பொருளாதாரம் 6.8% வரை உயரும்.. பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன்

news

அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையில் இடியை இறக்கிய வாஷிங்டன் கோர்ட்.. வரி விதிப்பு செல்லாது!

அதிகம் பார்க்கும் செய்திகள்