சென்னை: குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதிலும் உள்ள ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டின் 75வது குடியரசு தின விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடந்து வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை குடியரசு தினத்தன்று ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்ற உள்ளார். இந்த விழாவிற்காக ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன.
இதற்கான ஒத்திகை நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இவ்விழாவிற்கான பாதுகாப்பு பணிகளும் தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள், கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், வணிக வளாகங்கள், மக்கள் கூடும் பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும் பாதுகாப்புகள் பலப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மாநிலங்களில் உள்ள ரயில் நிலையங்களில் காவல்துறை கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையத்துக்கு வரும் அனைத்து பயணிகளும் சோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பாதுகாப்புகள் பலப்படுது்தப்பட்டுள்ளன. மக்கள் கூடும் இடங்கள், பேருந்து நிலையங்களில் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
ரயில் நிலையங்களில் சந்தேகப்படும் படியான நபர்கள் யாரேனும் இருந்தால் உடனடியாக காவல் துறை கட்டுப்பாட்டு எண் 1512 அல்லது 9962500500 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என பொது மக்களுக்கு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்நிலையில், குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 1250 ரயில்வே போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ரயில் நிலையங்கள் நுழைவு வாயில்கள் என அனைத்து பகுதிகளும் மெட்டல் டிடெக்டர் மூலம் பயணிகள் உடைமைகள் சோதனை செய்யப்பட்டு பின்னரே அனுப்பப்படுகின்றனர். ஓடும் ரயில்களிலும் போலீசார் சோதனையும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். குடியரசு தின விழாவில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க தடுக்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}