ஒரு மழை நாளிலிருந்து!

Jun 18, 2026,04:26 PM IST

- மொழிப்பித்தன் இரா.ச. குமார்


தூறல்தான் தூறிக்கொண்டிருக்கிறது

இன்னும்

அடித்து பெய்ய

ஆரம்பிக்கவில்லை...


காகிதத்தில்

கப்பல் தயார்

பெய்யப்போகும்

மழைக்காகவே காத்திருப்பு...


மழை நேரத்தில்

ஜன்னலை மூடி

சாரலை

புறக்கணிக்கப்போவதில்லை...




தற்சமயம்

கற்றுக்கொள்ள வேண்டியதென்னவோ

பெரும் மழை வருவதற்குள்

துரிதமாக துளிகளை

எண்ணி முடிக்கும் வித்தை...


இந்த தூறலுக்கே

துவண்டு தொங்கும் இலை  மழைத்துளிகளின் கணம்

தாங்குமா?..


நனைந்து

கரைந்துப்போகவும் தயார்

வானம் இனி

கொட்டித்தீர்த்தால் சரி...


அடிக்கும் காற்று

மிதமாய் இருக்கட்டும்

கருமுகிலை கலைத்து

இந்த இடம் தாண்டி

வெகுதூரம்

இழுத்து போய்விடக்கூடாது...


குடை உள்ளே இருக்கட்டும்

மழையை

வரவேற்க வாசலுக்கு வரவும்...

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!

news

செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்

news

"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி

news

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை

news

பிரம்ம தேவர் சரஸ்வதி தேவியை ஏன் திருமணம் செய்து கொண்டார்?

news

"ஆம்பளைங்கனா ஒஸ்தி, பொம்பளைங்கன்னா மட்டமா..?"

news

short cute Story: ஆடி வரும் ஆடி.. படியிலிருந்து தள்ளுவார்களா?!

news

சிந்தனைச் சிதறல்.. வெற்றியும் தோல்வியும், சோகமும் மகிழ்ச்சியும் ,கோபமும் பொறுமையும்!

news

Short Story : நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்