லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே சுமூகமான முறையில் தொகுதிப் பங்கீடு முடிவடைந்துள்ளது. காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளிலும், சமாஜ்வாடிக் கட்சி 63 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளன.
இந்தியா கூட்டணியில், உத்திரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் - சமாஜ்வாடி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு சுமுகமாக முடிவடைந்துள்ளன. உத்தரப்பிரதேச மாநிலத்தில் 80 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளை பிரித்துக் கொள்வது தொடர்பாக இந்திய கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகளிடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது.
காங்கிரஸுக்கு 15 தொகுதிகள்தான் என்று அகிலேஷ் யாதவ் கூறி வந்தார். இதை காங்கிரஸ் ஏற்கவில்லை. அதிருப்தியுடன் இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது இந்த பிரச்சனை முடிவுக்கு வந்து தொகுதி பங்கீடு சுமூகமாக முடிவடைந்துள்ளன. அகிலேஷ் யாதவை, காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தியதை தொடர்ந்து கூட்டணி பேச்சு வார்த்தைகள் சமூகமாக முடிவடைந்துள்ளதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
அதன்படி உத்திரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகளை சமாஜ்வாடி கட்சி ஒதுக்கி உள்ளது. மீதமுள்ள 63 தொகுதிகளில் சமாஜ்வாடி கட்சி போட்டியிடும் என்று தெரிகிறது. இந்த உடன்பாட்டின் மூலமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்த முறை இந்தியா கூட்டணி வலுவான ஒரு போட்டியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் விவரம்:
ரேபரேலி, அமேதி, கான்பூர் நகர், பதேபூர் சிக்ரி, பசகோவன், சஹரன்பூர், பிரக்யாராஜ், மகாராஜ்கஞ்ச், அம்ரோஹா, ஜான்சி, புலந்த் சாகர், காஸியாபாத், மதுரா, சீதாபூர், பாராபங்கி, தியோரியா, வாரணாசி.
கடந்த லோக்சபா தேர்தலின் போது இந்த கட்சிகளுக்கிடையே உடன்பாடு ஏற்படுவதில் பெரும் பிரச்சனை ஏற்பட்டு கடைசிவரை கூட்டணி முடிவாகாமல் தனித்துப் போட்டியிடும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக உள்ளே புகுந்து விளையாடிவிட்டது பாஜக. இந்த முறை முன்கூட்டியே உடன்பாட்டை முடித்துக் கொண்டுள்ளதால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜகவுக்கு கடும் போட்டியை இந்தியா கூட்டணி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பான அதிகாரப்பூர்வ முடிவு இன்று மாலை வெளியானது. முன்னதாக, தொகுதி பங்கீடு தொடர்பாக அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், அனைத்தும் நன்றாக உள்ளன. அனைத்தும் நன்றாக முடிந்துள்ளன. கூட்டணி கண்டிப்பாக உண்டு. எந்த பிரச்சினையும் இல்லை. விரைவில் எல்லாம் தெளிவாக தெரிய வரும் என்று தெரிவித்தார். இதன் மூலம் சுமூகமாக சுமூகமான முறையில் தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளதாக அவர் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார் என்று கருதப்படுகிறது.
ரேபரேலி, அமேதியில் யார் போட்டி?
கடந்த தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதேசமயம், வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி வெற்றி பெற்றார். அமேதி, ரேபரேலி தொகுதிகள் காந்தி குடும்பத்திடமே தொடர்ந்து இருந்து வந்தன. அதில் அமேதியை தற்போது பாஜக தன் வசப்படுத்தி விட்டது. ரேபரேலி மட்டுமே மிஞ்சியுள்ளது.
இந்த முறை சோனியா காந்தி லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை. அவர் ராஜசபா எம்.பியாகிவிட்டார். எனவே ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் அமைதி தொகுதியில் யார் போட்டியிடுவார் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}