"சாமியே சரணம்".. விறுவிறுப்படையும் ஐயப்பன் சீசன்.. கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள்!

Nov 24, 2023,11:33 AM IST

கொல்லம்:  ஜயப்பன் கோவில் சீசன் தொடங்கியுள்ள நிலையில்,  கொல்லம் மற்றும் கோட்டயத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.


கார்த்திகை மாதம் மாலை அணிந்து நேர்த்தியாகவே விரதம் இருந்து.. வருடா வருடம் கார்த்திகை மாதம் என்றாலே ஐயப்பன் சீசன் தான் நினைவுக்கு வரும். கார்த்திகை மாதத்தையும் ஐயப்பனையும் பிரிக்க முடியாது. அத்தகைய சீசன் தான் தற்போது ஆரம்பமாகியுள்ளது. 


மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த 16ம் தேதியே திறக்கப்பட்டது. முதல் நாளில் இருந்தே ஐயப்பனை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகின்றது. பிற மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் கூட்டம் அதிகளவில் வரும் என்பதால்  கேரள மாநிலம் கொல்லம் மற்றும் கோட்டயத்துக்கு சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.




இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு: 

   

செகந்திராபாத்தில் இருந்து கொல்லத்துக்கு டிச 8, ஜன 12, 19 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கும், டிச 24, 31 தேதிகளில் மாலை 4.30 மணிக்கும், ஜன 7-ஆம் தேதி மாலை 4.50 மணிக்கும், ஜன 10, 17-ஆம் தேதிகளில் மாலை 4 மணிக்கும், ஜன14-ஆம் தேதி பிற்பகல் 2.40 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். 


மறுமாா்க்கமாக கொல்லத்தில் இருந்து செகந்திராபாத்துக்கு டிச.9, ஜன.13, ஜன.20 தேதிகளில் இரவு 11 மணிக்கும், டிச.26, ஜன.2, 9, 12, 19, 16 தேதிகளில் நள்ளிரவு 2.30 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து  கோட்டயத்துக்கு டிச.1, 8, 29, ஜன.12, 19 தேதிகளில் இரவு 10.50 மணிக்கும் டிச.15, 22, ஜன.5 தேதிகளில் மாலை 4.25 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். 


மறுமாா்க்கமாக கோட்டயத்தில் இருந்து விஜயவாடாவுக்கு டிச.3, 10, 17, 24, 31,ஜன.7, 14, 21 தேதிகளில் நள்ளிரவு 1 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. மேலும், ஆந்திர மாநிலம் நா்சாபூரில் இருந்து கோட்டயத்துக்கு டிச.10, 17,24, 31 ஜன.7, 14 தேதிகளிலும், மறுமாா்க்கமாக டிச.11, 18, 25, ஜன.8, 15 தேதிகளிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. 


இந்த ரயில்கள் ரேணிகுண்டா, காட்பாடி,ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், பாலக்காடு, கோவை, திருச்சூா் வழியாக இயக்கப்படும். இதற்கான பயணச்சீட்டுகளை வெள்ளிக்கிழமை (நவ.24) காலை 8 மணி முதல் முன்பதிவு செய்யலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்