எங்களுக்கு மகன் பிறந்த பிறகுதான்.. பும்ரா பெரிய ஆளானார்.. மனைவி சஞ்சனா கணேசன் நெகிழ்ச்சி!

Jun 12, 2025,09:57 AM IST

மும்பை: இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் மனைவி சஞ்சனா கணேசன், தங்கள் மகன் அங்கத் பிறந்த பிறகு, கணவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக உருவெடுத்துள்ளதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 


டிவி தொகுப்பாளராக வலம் வருபவர் சஞ்சனா கணேசன். அவரும் பும்ராவும் காதலித்து 2021ல் திருமணம் செய்து கொண்டனர். இந்தத் தம்பதியினருக்கு 2023ம் ஆண்டு செப்டம்பரில் அங்கத் எனும் ஆண் குழந்தை பிறந்தது.


இந்த நிலையில், 'மோமென்ட் ஆஃப் சைலன்ஸ்' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சஞ்சனா தனது காதல், குடும்பம், பும்ரா குறித்து மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். பேட்டியில் சஞ்சனா கூறியுள்ளதாவது:


எங்கள் குழந்தை பிறந்த பிறகுதான் பும்ரா நிறைய உயர்வு கண்டார். மருத்துவமனையில் எங்கள் குழந்தையை கையில் ஏந்தியபோது, என் கணவர் ஆசிய கோப்பையில் விளையாடிக் கொண்டிருந்தார். குழந்தை பிறந்ததும், அவர் உடனடியாகத் திரும்பி வந்துவிட்டார். 




நான் சொல்ல விரும்பவில்லை, ஆனால் அங்கத் வந்த பிறகு பும்ரா ஒரு மேம்பட்ட கிரிக்கெட் வீரராகிவிட்டதாக நான் கருதுகிறேன். வீட்டிற்குத் திரும்பி வரும்போது, அங்கே அமைதியான சூழல் கிடைத்தால், நீங்கள் ஒரு நல்ல தந்தையாக  மற்றும் கணவராக மாறி, கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக விடுபட்டு மன அமைதியுடன் இருக்கலாம்.


மற்ற கிரிக்கெட் வீரர்களின் மனைவியர் குறித்துக் கேட்டால், ஒவ்வொருவரும் வேறுபட்டவர்கள். அனைவரும் வித்தியாசமானவர்கள். விளையாட்டு வீரர்களும், அணியில் உள்ள மற்ற வீரர்களும் கூட வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்டவர்கள். அதை நீங்கள் கிரிக்கெட் மைதானத்திலேயே காணலாம். எனவே, அவர்களின் மனைவிகள் கிட்டத்தட்ட அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டு விடுகின்றனர். 


நான் ஒரு வீரரை மைதானத்தில் பேட்டி கண்டுவிட்டு, பின்னர் பால்கனியில் அவரது மனைவியை சந்திப்பேன். அப்போது, 'ஓ! எனக்குப் புரிகிறது!' என்று தோன்றும். கிட்டத்தட்ட ஒவ்வொரு சூழ்நிலையிலும் அது யின் மற்றும் யாங் (Yin and Yang) போலத்தான். இந்த நபருக்கு இதுதான் தேவைப்பட்டது, அதனால்தான் இவர் அவனது மனைவி என்பதை நீங்கள் உணருவீர்கள் என்றார் சஞ்சனா.


கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய பிறகு, பும்ராவுடன் தான் எடுத்த வைரலான பேட்டி குறித்தும் சஞ்சனா மனம் திறந்தார். கணவரை நேர்காணல் செய்ய தான் விரும்புவதாகவும், ஆனால் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் தன்னைத் திசை திருப்பும் வகையில் வேடிக்கையான விஷயங்களைச் செய்வார் என்றும் சஞ்சனா வெளிப்படுத்தினார்.


"உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு நான் என் கணவரை பேட்டி எடுத்துக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் என்ன கேள்வி கேட்பது என்று தெரியவில்லை. அதனால் பேட்டியை முடித்துக் கொண்டேன். எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள் என்று சொன்னேன். அவரை பேட்டி எடுப்பது எனக்குப் பிடிக்கும். அவருடன் இருப்பது வேடிக்கையானது. நான் மிகவும் கவனம் செலுத்துவதை அவர் என் முகத்தைப் பார்த்தே கண்டுபிடித்துவிடுவார். அந்தப் பொறுப்பில் இருந்து என்னை ரிலாக்ஸாக்க அவர் தொடர்ந்து முயற்சிப்பார். அவர் வேடிக்கையான விஷயங்களைச் செய்வார், சிரிப்பார் அல்லது கண் சிமிட்டுவார். அப்போது நான், 'இது வேலைக்கு ஆகாது!' என்று சிரித்தபடி கூறினார் சஞ்சனா.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மீனவர்களை விடுவிக்கக்கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

news

SIR வேண்டாம் என்று திமுக உச்ச நீதிமன்றம் சென்றால், அதிமுக SIR வேண்டும் என செல்வோம்: ஜெயக்குமார்

news

தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை விஜய் வலியுறுத்தல்!

news

கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: சென்னை தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை!

news

அரசியல் பொதுக்கூட்ட விதிமுறைகள்.. நவ., 6ல் அனைத்துக் கட்சி கூட்டம்: தமிழ்நாடு அரசு!

news

சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம்!

news

கோவை விமான நிலையம் அருகே அதிர்ச்சி... மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

news

'NO' சொல்ல தயக்கமா?.. தயங்காமல் சொல்லுங்க.. சொல்ல வேண்டிய இடத்தில்!

news

ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே.. இரவானால் பகல் ஒன்று வந்திடுமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்