ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து.. வெளியேறுகிறாரா சஞ்சு சாம்சன்.. சிஎஸ்கேவுக்கு வருவாரா?

Nov 08, 2025,10:49 PM IST

சென்னை:  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முக்கிய வீரராக திகழும், அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 2026 ஐபிஎல் தொடரின்போது வேறு அணியில் விளையாடுவார் என்ற பேச்சு வலுத்துள்ளது. அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாறுவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.


2018 மெகா ஏலத்தின்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வந்த சாம்சன், 2021 முதல் கேப்டனாக இருக்கிறார். 2022-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இறுதிப் போட்டிக்கும் கொண்டு சென்றார். கடந்த மெகா ஏலத்தில் அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ. 18 கோடிக்குத் தக்கவைத்தது.




இந்த நிலையில் அடுத்த சீசனில் அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற மாட்டார் என்று சொல்கிறார்கள். சாம்சன் வெளியேற விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாற வாய்ப்பு உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. 


ஆனால் சஞ்சு சாம்சனை ராஜஸ்தான் ராயல்ஸ் விட்டுத் தருமா என்ற கேள்விவியும் எழுந்துள்ளது. ஒருவேளை சஞ்சுவைத் தர விரும்பினால் அதற்குப் பதில் சென்னை அணியின் வலுவான வீரர்கள் யாரையாவது ராஜஸ்தான் கேட்கலாம். குறிப்பாக, ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே  ஆகியோரில் ஒருவரை அது கேட்க வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.


இதில் ஜடேஜா ஆரம்பத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடியுள்ளார். துபேவும் கூட ஆடியுள்ளார். ருத்துராஜ் ஒருவேளை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குப் போவதாக இருந்தால், சஞ்சு சாம்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக்கவும் வாய்ப்புள்ளது.


இதெல்லாம் எந்த அளவுக்கு சாத்தியம் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வடதமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு இருக்காம் மக்களே: வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

அதிமுக கூட்டணியில் அமமுக.,விற்கு 6 சீட்டா?...உண்மையை உடைத்த டிடிவி தினகரன்

news

அதிமுக எத்தனை இடங்களில் போட்டி? பாஜக., கேட்பது என்ன?...வெளியான சுவாரஸ்ய தகவல்

news

தமிழ்நாட்டில் இருந்து ஒலிக்கும் இந்திய விவசாயிகளுக்கான குரல்: முதல்வர் முக ஸ்டாலின்!

news

அதி நவீன வசதிகளுடன் 20 வால்வோ பேருந்துகள்.. சொகுசாக இனி போகலாம்..!

news

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து.. புளூ பேர்ட் செயற்கைக்கோளுடன்.. விண்ணில் பாய்ந்த எல்.வி.எம்.3-எம்.6

news

ஆரவல்லி மலைத் தொடர்.. இமயமலைக்கே சீனியர்.. கணிமத் திருடர்களிடம் சிக்கி சிதையும் அவலம்!

news

2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில்.. 30% வாக்குகள் கிடைக்கும்.. தவெக சொல்கிறது!

news

டிசம்பர் 28 முதல் 30 வரை...இபிஎஸ் தேர்தல் பிரசாரம்...புதிய விபரம் வெளியீடு

அதிகம் பார்க்கும் செய்திகள்