- சசிகலா விஸ்வநாதன்
அருணன், தன் அம்மாவிடம் உரத்த குரலில் கத்தி கத்தி அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தான். அருணன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது . மங்களம்" அருணன்! பொறுமையாகப் பேசு. இப்படி வெடிப்பாகப் பேசினால் காரியம் ஆகாது. நீ எழுந்து போ! நான் அம்மாவிடம் பேசுகிறேன்,'' என்றதும் அருணன் எரிச்சலுடன் நகர்ந்தான்.
"என்ன பிடிவாதம், இந்த அம்மாவுக்கு! சொல்வதெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு தான். அப்பா பரவாயில்லை . சொல்வதை கொஞ்சமேனும் புரிந்து கொள்கிறார். அம்மா இப்படி பிடிவாதம் பிடித்தால் தருணா அக்கா தான் என்ன செய்வாள்,"என்று இயலாமையில் தனக்குத் தானே புலம்ப ஆரம்பித்தான்.
விஷயம் இதுதான். மாயவரத்திலிருக்கும் கோகிலாவும், சடகோபனும் பெங்களூருக்கு புலம் பெயர வேண்டும். இருவருக்கும் வயது எழுபதுக்கு மேல் ஆகிறது. இனிமேலும் தனியாக இருக்கலாகாது. ஏதேனும் மருத்துவ அவசரத்திற்கு உதவிக்கு எவரும் இல்லாமல் தனியாக இருப்பதில் தருணாவிற்கும், அருணனுக்கும் சம்மதம் இல்லை.
தருணா எவ்வளவு சொல்லியும், "காவேரிக் கரையையும், அபயாம்பாளையும் விட்டு தான் வர முடியாது என்று
பிடிவாதம் பிடிக்கிறாள்;அம்மா. ஐம்பது வருஷங்களாக இருந்த வீட்டை விட்டு ஒண்டு குடித்தனம் போல் இருக்கும் ஃப்ளாட்டில் எப்படி இருக்க முடியும்?மேலும் பெண் வீட்டில் தங்குவது தனக்கு அவமானம்; ஊர் உலகம் சிரிக்கும் என்றெல்லாம் வேறு வாதம் செய்கிறாள்.

"சரி! எங்களுடன் அமெரிக்காவுக்கு வந்து தங்குங்கள்; என்று,அடுத்ததாக யோசனை வைக்க, அதையும் நிராகரிக்கிறாள்." ஒரு நாள் கிழமை செய்ய முடியாது. கோவில் குளம் இல்லாத அமெரிக்கா என்ன ஊர்! ஆயிரம் இருந்தாலும் மாயவரம் போல் ஆகுமா?" என்று தான் முடிக்கிறாள்.
"சரி! அம்மா ! நீங்கள் தருணா அக்கா வீட்டிற்குப் போய்., பாஸ்போர்ட்டுக்கு மனு கொடுங்கள். நான் அக்காவுடன் பேசுகிறேன். பொங்கல் கழிந்ததும் இங்கே வாருங்கள். இங்கே இருப்பது பிடித்தால் இங்கேயே தங்கி இருக்க; க்ரீன் கார்டுக்கு மனு செய்யலாம்.தருணாவுடனேயே சேர்ந்து இருந்தால் மிகவும் நல்லது.மிகவும் உத்தமம்.அதில் உங்களுக்கு சம்மதம் இல்லையெனில் , அதை நான் புரிந்து கொள்கிறேன்.அக்கா வீட்டுக்கு பக்கத்தில் நீங்கள் போய் இருக்க முடியுமா; என்றும் பாருங்கள்.
அத்திம்பேருக்கும் அப்பாவுக்கும் ஒத்த மனம். அவருடைய அப்பா-அம்மாவும் அடுத்த ஃப்ளாட்டில் இருக்கிறார்கள் . அப்பாவுக்கும் உங்களுக்கும் பேச்சுத்துணையாக இருக்கும்.மல்லேஸ்வரம் நல்ல இடம். நிறைய கோயில்கள் உள்ளன. நம்ப தமிழ்காரர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். பெங்களூர் தமிழ் நாடு போல் இல்லை. கொஞ்சம்" குளு குளு" என்று இருக்கும். எங்கள் கூடவோ ,அக்கா பக்கத்திலோ, நீங்கள் இருந்தே ஆக வேண்டும். இனிமேல் தனியாக இருக்கக் கூடாது. அக்காவின் மாமனார்-மாமியார் மதுரையிலிருந்து இங்கே ஜாகை மாறியது, அக்காவுக்கு எத்தனை ஆசுவாசம்!
நான் பிடிவாதமாக அமெரிக்காவுக்கு வந்தாக வேண்டும் :என்று உங்களைக் கட்டாயப் படுத்தவில்லை,, நீங்களும் கொஞ்சம் இறங்கி வந்தே ஆகணும்.எங்களுக்கம் வர போக சௌகரியம். சில நாட்கள் மாயவரத்திலும் போய் இருங்கள். ஆனால் அங்கே போனால் ஒரு மாதம் இருக்கலாம்.மாயவரம் வீட்டை ஏறக்கட்டி பங்களூர் வந்து சேரப்பாருங்கள். அவ்வளவுதான். புரிஞ்சுதா?"என்று கண்டிப்பும் கறாராகுமாக பேச்சை முடித்தாள்; மங்களா. கோகிலாவுக்கு தலையாட்டுவதைத் தவிர வேறு வழி இல்லை, போலிருந்தது.
"என்ன ஆச்சு;" என்பது போல் தலை உயர்த்திப் பார்த்தான். அருணன். ஒருவாறாக, அடுத்த வருடம் சிறிது நாட்கள் அமெரிக்கா வர சம்மதம் வாங்கியுள்ளேன். இப்போதே அமெரிக்காவுக்கு வரும்படி அழுத்தம் கொடுக்காதே. மாயவரத்திலிருந்து ஒருவழியா நெம்பி பங்களூர் வரவைத்தாகி விட்டதது.எறும்பு ஊர, கல்லும் தேயும்.போகப்போக பார்த்துக் கொள்ளலாம். என்னிடம் விடு; இந்த வேலையை. அம்மாவிடம் அடுத்த முறை பேசும்போது கனிவுடன் பேசு. வேலையை கெடுத்து வைக்காதே" என்ற மங்களாவை வியப்புடன் பார்த்தான் அருணன் .’கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்,’ என்பது இதானோ?
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)
மங்கை வந்தாள்!.
எறும்பு ஊர!
தேவைக்குப் பயன்படுத்துவோம்.. தேவையற்றதை தேவையானவருக்குப் பகிர்ந்தளிப்போம்!
எது சுதந்திரம்?
துரோகம்!
பெண்களை இழிவாகப் பேசாதே ஆண்களே
ஆடி அமாவாசை மாதமும், அதன் சிறப்புகளும்!
தவெக கொண்டு வந்த தொகுதி மறுவரையறை தனி தீர்மானம்: ஆதரவு யார்? எதிர்ப்பு யார்?
சென்னையில் சொத்து வரி கிடுகிடு உயர்வா.. மாநகராட்சி தரும் விளக்கம் என்ன?
{{comments.comment}}