சூரியன் உடைந்தது.. ஒரு பாகம் கழன்று வந்து தனியாக சுற்றுவதாக விஞ்ஞானிகள் தகவல்!

Feb 11, 2023,11:17 AM IST
வாஷிங்டன்: சூரியனிலிருந்து ஒரு பகுதி உடைந்து தனியாக வந்து சூறாவளி போல சுழன்று கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரியன் குறித்த ஆய்வில் இந்த புதிய நிகழ்வு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.



விண்வெளி ஆய்வாளர்களை தொடர்ந்து ஆச்சரியப்படுத்தும் ஒரு விஷயம் எது என்றால் அது சூரியன்தான். சூரியன் குறித்து பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் சூரியனில் நடந்துள்ள ஒரு புதிய நிகழ்வு விஞ்ஞானிகளை வியப்பிலும், குழப்பத்திலும் ஆழ்த்தியுள்ளன.

அதாவது சூரியனிலிருந்து ஒரு பகுதி கழன்று தனியாக வந்து சூறாவளி போல,அதன் வட முனையில் சுற்றுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வு எப்படி நடந்தது என்பது குறித்து தற்போது ஆய்வுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்த அதிய நிகழ்வை நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம் பிடித்துள்ளது. அதை விண்வெளி விஞ்ஞானி டாக்டர் டிமிதா ஸ்கோவ் தனது  டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சூரியனிலிருந்து சூரியக் கதிர்வீச்சு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இது சில சமயங்களில் நமது பூமியில் தொலைத் தொடர்பு அமைப்புகளின் செயல்பாட்டைப் பாதிக்கும். சில நேரங்களில் டிவி ஒளிபரப்பு நின்று போவது கூட இதன் எதிரொலிதான். எனவே தற்போதைய சூரியப் பிளவு குறித்த நிகழ்வு விஞ்ஞானிகளிடையே ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

கடந்த காலத்திலும் கூட இதுபோன்ற சூரியப் பிளவுகள் நடந்துள்ளன. ஆனால் தற்போது நடந்துள்ளது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. காரணம் இந்தப் பிளவு பெரிது என்பதால்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் நாளை மிதமான மழை செய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

அம்மா ஜெயலலிதா இருந்த இடத்தில் தற்போது மோடி இருக்கிறார்: டிடிவி தினகரன் பேட்டி!

news

தவெக தலைவர் வாயில் வடை சுடுகிறார்.. இவருக்கு என்ன அவ்வளவு பெரிய கூட்டமா?-செல்லூர் ராஜூ விமர்சனம்!

news

பனையூர் பண்ணையார் அவர்களே.. விஜய்யை நோக்கி அதிரடியாக திரும்பிய அதிமுக..!

news

ஊழலும் இல்லை, தீய சக்தியும் இல்லை; அதனால்தான் விஜய் எங்களை விமர்சிக்கவில்லை - நயினார் நாகேந்திரன்

news

77-வது குடியரசு தினம்.. சென்னை மெரினாவில் தேசியக் கொடியேற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி

news

நான் என்ன சொல்ல வந்தேன்னா.. விசிக குறித்துப் பேசியது தொடர்பாக.. ஆதவ் அர்ஜூனா விளக்கம்!

news

தஞ்சையில் திமுக மகளிர் அணி மாநாடு: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு!

news

அதிரடி சரவெடி... மீண்டும் வேகமெடுத்து வரும் தங்கம் விலை... இதோ இன்றைய விலை நிலவரம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்