சென்னை: தந்தை பெரியார் எனும் மாமனிதரை கொச்சைப்படுத்தும் சீமானுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில், திராவிடர் இயக்கம் குறித்தும், திராவிட இயக்க தலைவர்கள் குறித்தும், அவதூறுகளையும், இழிவுகளையும் தொடர்ந்து அள்ளி வீசி வருகிற நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், எல்லை மீறி, வெறி உணர்ச்சியோடு, மனம் போன போக்கில் தந்தை பெரியார் எனும் மாமனிதரைக் கொச்சைப்படுத்தி பத்திரிகையாளரிடம் பேசியுள்ளார்.

தந்தை பெரியாரைப் பற்றி பேசிய கருத்துகளுக்கு ஆதாரம் என்ன என்று கேட்டால், சிறிதும் பொறுப்பின்றி கோமாளித்தனமாகவும், ஆணவமாகவும், அநாகரிகமாக மேலும் மேலும் நடந்து கொள்கிறார். இதற்கு எதிர் வினையாக கட்சி வேறுபாடு இல்லாமல் தமிழகத்தில் போராட்டங்களும், நீதிமன்றங்களில் முறையீடு செய்வது நடந்து வருகின்றன.
சீமானின் பேச்சு சமூகத்தில் பதற்றம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்த பிரச்சனையில் காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து அது தொடர்பான அறிக்கையை ஜனவரி 20ஆம் தேதி நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற கிளை, மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
பொது இடத்தில் அமைதியை குறைத்தல், கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல் முதலான பிரிவுகளில் சீமான் மீது 60க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை எதனை பற்றியும் சிறிதும் பொருட்படுத்தாமல், அகம் பாவத்துடன் மேலும் மேலும் சீமான் உளறி வருவது வன்மையான கண்டனத்திற்கு உரியதாகும்.
தமிழ்நாட்டை கலவர பூமியாக்கி, சட்டம் ஒழுங்கு சீர்குலைத்து விட்டது என்ற குற்றம் சுமத்துவதற்கான முதற்கட்ட முயற்சியே இது. தமிழ்நாடு அரசு, இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இவரை நீதிமன்றத்தின் கூண்டில் ஏற்றி விசாரித்து, உரிய தண்டனையை உடனடியாக அளிக்க வேண்டும். நாகரீக அரசியலை விரும்புகிற அனைவரும் இத்தகைய தீய சக்திகளுக்கு தக்க பாடம் புகட்டிட தொடர்ந்து அணி திரள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா.. மலை உச்சிக்கு கொப்பரை கொண்டு செல்லப்பட்டது!
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோவிற்கு அனுமதி கிடையாது: புதுச்சேரி சபாநாயகர் செல்வம்
உக்ரைன் - ரஷ்யா போர்.. இதுக்கு என்ட் கார்டே கிடையாதாய்யா.. லேட்டாகுமாம்.. அமெரிக்கா அறிவிப்பு!
படுத்து தான் பார்ப்போமே.. ஆரோக்கியத்துக்கு பலவித நன்மைகளை அளிக்கும் பாய்!
நல்லூர் சுங்கச்சாவடியில் மழைநீர் தேக்கம் - போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
வாய்ப்புண் தொல்லை ஜாஸ்தியா இருக்கா??.. சீக்கிரம் குணமாக எளிய பாட்டி வைத்தியம்!
சரியா தூக்கம் வர மாட்டேங்குதா.. பூண்டு யூஸ் பண்ணிப் பாருங்களேன்.. மாற்றம் தெரியும்
டிட்வா புயல் பாதிப்பு...ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம்: அமைச்சர் k.k.s.s.r.ராமச்சந்திரன் அறிவிப்பு!
{{comments.comment}}