விரல் (ஸ்பரிசம்)

Oct 21, 2025,04:08 PM IST

- தா சிலம்பரசி


தோள் மீது தென்றலாய்... 

தாய் மீது மன்றலாய்...

அன்பை அச்சிட்டு...

பண்பை வித்திட்டு... 

கண்ணீரை துடைக்கும்

கருணையின் தாய்...

கவிதை எழுதும்

சிந்தையின் தூதர்...விரல்


அன்பின் நடனத்தில்...

நுண்ணிய உரைபா...

விரல் ஒன்று வாசிக்க..

உணர்வுள்ள ஓவியம்

மவுன மனதின்

புத்தகத்தை 

தொட்டவுடன் உருகுகிறது...

நினைவுகளை பருகுகிறது...

நெருப்பு நீர்ப்பாய்ச்ச

ஒரு புன்னகை 

பேசும் 

கைக்குலுக்கலில் விரல்கள்...




வேறாகி போகும்

உறவுகள் கூட...

விருந்தோம்பல் பண்பில் 

உணவு பரிமாற...

பிரிந்து  போகும்

பந்தங்கள் கூட

விரலின் வழியே

விசாலமாக...


நட்பு கமழும்

நறுமணத்தோடு..

விரல் தொடுதலில்

உயிர் பெறும்...


(தா. சிலம்பரசி வேலூர் மாவட்டம் மேல்மணவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக 13 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஆன்லைன் வகுப்புகள், செயல் ஆராய்ச்சி, 3D மற்றும் AI தொழில்நுட்பம், விளையாட்டு வழிக் கற்றல், மின்னணு மதிப்பீடு போன்ற நவீன முயற்சிகளின் மூலம் தொடக்க நிலை மாணவர்களை ஆர்வமுடன் கற்றலில் ஈடுபடுத்தி, தமிழ்நாடு அரசின் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் தொழில்நுட்பக் கல்வி முன்னேற்றத்தில் சிறப்பான பங்களிப்பு செய்துள்ளார். தமிழின் மீது கொண்ட ஆர்வத்தால் தமிழ்நாடு அரசின் ஊஞ்சல், தேன் சிட்டு, கனவு ஆசிரியர் இதழ்களில் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு, மாணவர்களின் கதை, கவிதை, ஓவியம், கட்டுரை போன்ற படைப்பாற்றல் திறன்களை வளர்த்துள்ளார். இவரின் சிறந்த கல்விச் சேவையைப் பாராட்டி, தமிழ்நாடு அரசு 2025 ஆம் ஆண்டு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கி கௌரவித்துள்ளது)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி

news

அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்

news

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?

news

என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி

news

ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு

news

பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!

news

திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்

news

எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்