சிங்கப்பூரில் அடுத்த 3 மணி நேரத்தில் கன மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்

Apr 13, 2025,11:53 AM IST
சென்னை: சிங்கப்பூரில் அடுத்த 3 மணி நேரத்தில் மிக மிக கன மழை வெளுத்து வாங்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. வெளியில் தலை காட்ட முடியவில்லை. அவ்வப்போது கோடை மழை வந்து சற்றே புழுக்கத்தைத் தணித்தாலும் கூட வெயில் குறைந்தபாடில்லை.



தலைநகர் சென்னையில் நேற்று இதுவரை இல்லாத அளவுக்கு 103 டிகிரி பாரன்ஹீட் வெயில் வெளுத்து வாங்கியது. வெப்ப அலையும் வீசியதால் மக்கள் தவித்துப் போய் விட்டனர்.

இந்த நிலையில் சிங்கப்பூரில் கன மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அப்டேட்டில், மிகப் பெரிய அளவிலான மழை மேகங்கள் சிங்கப்பூர் மீது படர்ந்து கொண்டுள்ளன. அடுத்த 1 முதல் 3 மணி நேரத்திற்கு மிகப் பெரிய அளவிலான கன மழை பெய்யும்.

சில நேரங்களில் இது எதிரில் இருப்பது தெரியாத அளவுக்கு மிக மிக அடர்த்தியாகவும் இருக்கக் கூடும் என்று தெரிவித்துள்ளார் வெதர்மேன். மழை வந்தால் என்ஜாய் மக்களே!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் நடிப்புக்கு என்ன சம்பளம் தெரியுமா.. அம்மாடியோவ்!

news

குழந்தைகள் தினம்.. நல்ல நல்ல பிள்ளைகளை உருவாக்கும் பெற்றோர்களுக்கும் முக்கியமான நாள்!

news

கூரைவீடும் வாழ்க்கையும்!

news

மணக்கும் மலர்கள்.. மயக்கும் மழலைகள்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 14, 2025... இன்று நல்ல காலம் பிறக்கிறது

news

பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள்.. வேகமாக முன்னேறும் தேஜகூ.. போராடும் ஆர்ஜேடி.. தடுமாறும் காங்.!

news

மேகதாது வழக்கு: தமிழக உரிமையை மீட்க திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி

news

திருச்சி தந்த அதிர்ச்சி!

news

பல்கலைக்கழக விவகாரம்... நிர்வாகமும், அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: அண்ணாமலை

அதிகம் பார்க்கும் செய்திகள்