சிவகார்த்திகேயன் செய்த துரோகம்: பதிலுக்கு இமான் கொடுத்த ஷாக்

Oct 17, 2023,01:47 PM IST

சென்னை : சிவகார்த்திகேயன் எனக்கு செய்தது மிகப்பெரிய துரோகம். இந்த ஜென்மத்தில் இனிமேல் நாங்கள் சேர வாய்ப்பில்லை என இசையைமப்பாளர் டி. இமான் இணைய பக்கத்தில் வருத்தமுடன் தெரிவித்துள்ளார். இந்த பேட்டி கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பி உள்ளது. 


படு பிஸியான இசை அமைப்பாளர்களுள் ஒருவராக திகழ்பவர் டி.இமான். பல முன்னனி ஹீரோக்களின் படங்களில் இசையமைத்து பல ஹிட் பாடல்களை தந்தவர். விஜய் நடித்த தமிழன் படத்தில் தான் முதன்முதலில் இவர் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவர் இசையமைத்த முதல் படத்தில் அனைத்து பாடல்களும் ரசிகர்களின் மத்தியில் ஹிட் ஆனது. குறிப்பாக, அஜித் நடிப்பில் வெளிவந்த விசுவாசம் படத்தில் இவருடைய பாடல்கள் அனைத்தும் சூப்பர்  டூப்பர் ஹிட் ஆகி பட்டி தொட்டி எங்கும் இசைத்தது. தொடர்ந்து பல படங்களில் இசையமைத்தார்  இமான். தற்பொழுது பல பாடங்களுக்கு இசையமைத்து வருகிறார்.மாற்றுத்திறனாளிகளான திருமூர்த்தி, விஜயலட்சுமி, சிறுமி சகானாவிற்கும் பாட வாய்ப்பு கொடுத்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் மட்டும் இல்லாமல் பிரபலங்கள் பலரும் இமானை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்து வந்தார்கள்.




2013ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்துக்கு டி.இமான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற ஊதாக் கலரு ரிப்பன்  உள்ளிட்ட அனைத்துப் பாடல்களும் சூப்பர்ஹிட் ஆகின. சிவகார்த்திகேயன் நடித்த ரஜினிமுருகன், சீமராஜா, நம்ம வீட்டுப் பிள்ளை ஆகிய  படங்களுக்கும் டி.இமான் இசையமைத்திருந்தார். இப்படத்தின் பாடல்களும் பெரும் வரவேற்பை பெற்றனர். சீமராஜா படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயன் - டி.இமான் கூட்டணி மீண்டும் இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


 ஒரு பேட்டியில் டி.இமான், சிவகார்த்திகேயன் குறித்து மன வருத்தத்துடன் கூறியிருந்தார். அதில், "மனம் கொத்தி பறவை படத்தில் தான் எங்களுடைய பயணம் ஆரம்பித்தது. படத்தில் தொடர்ந்து ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமராஜா, எங்கள் வீட்டுப்பிள்ளை போன்ற பல படங்களுக்கு நான் இசையமைத்து இருக்கிறேன். அந்த படத்தில் எல்லா பாடல்களுமே பெரிய அளவில் ஹிட் கொடுத்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் அவர் முதன்முறையாக என்னுடைய இசையில் தான் பாடினார். ஆனால், இனி அவருடன் நான் பயணிக்க போவதில்லை. இந்த ஜென்மத்தில் இனி சேர்ந்து நாங்கள் பயணம் செய்வது ரொம்ப கஷ்டமான விஷயம்.


காரணம், எனக்கு சிவகார்த்திகேயன் மிகப்பெரிய துரோகத்தை செய்து விட்டார். அதை என்னால் வெளியில் சொல்ல முடியாது. அடுத்த ஜென்மத்தில் வேண்டுமானால் நான் இசையமைப்பாளராக, அவர் நடிகராக இருந்தால் வேண்டுமானால் பார்க்கலாம். துரோகம் என்பது நமக்கு தெரியாமல் தான் நடக்கும். அவர் செய்த துரோகத்தை நான் தாமதமாக தான் புரிந்து கொண்டேன். ஆரம்பத்தில் அவர் என்னிடம் நன்றாக தான் பேசிக் கொண்டிருந்தார். அவரை நானும் நம்பினேன். அதற்கு பிறகு தான் அவர் எனக்கு செய்த துரோகம் தெரிய வந்தது. இதை நான் வேறொருவர் மூலமாக தெரிந்து கொள்ளவில்லை. நானே அனுபவித்து உணர்ந்தேன்.


இது குறித்து நான் அவரிடமும் நேரடியாகவே கேட்டு விட்டேன். அதற்கு அவர் சொன்ன பதிலை இந்த இடத்தில் என்னால் சொல்ல முடியாது. பல விஷயங்களை மூடி சொல்ல தான் ஆக வேண்டும். அதற்கு காரணம், குழந்தைகளின் எதிர்காலம் தான். இந்த ஊர் என்னை பற்றி என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை. என்னை தவறானவன் என்று நினைத்தாலும் பரவாயில்லை. நான் யார் என்று எனக்கு தெரியும். என்னை படைத்தவனுக்கும் என்னை தெரியும். நான் செய்யும் தொழிலுக்கும், என்னை சேர்ந்தவர்களுக்கும், என்னுடைய குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் நான் சரியாக இருக்கிறேனா என்பதை மட்டும் தான் நான் பார்ப்பேன். அதேபோல் சிவகார்த்திகேயன் எனக்கு செய்த துரோகத்திற்கு அவர் மட்டுமே காரணம் கிடையாது. அதில் அவர் ஒரு முக்கியமான ஆள் தான். அந்த வலியும் வேதனையும் எனக்கு அதிகமாகவே இருந்தது" என்று கூறி இருக்கிறார்.


இமானின் இந்த பேட்டிக்கு பிறகு சிவகார்த்திகேயன் அப்படி என்ன துரோகம் செய்தார் என கோலிவுட்டே பரபரத்து போய் உள்ளது. சோஷியல் மீடியாவில் இது பற்றிய பேச்சாக உள்ளது. எக்ஸ் தளத்தில் #Sivakarthikeyan, #DImman போன்ற ஹேஷ்டேக்குகள் செம டிரெண்டாகி வருகின்றன.

சமீபத்திய செய்திகள்

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

news

லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!

news

Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி

news

எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!

news

முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!

அதிகம் பார்க்கும் செய்திகள்