IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!

Apr 27, 2025,01:27 PM IST

சென்னை: ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பரிதாபமான நிலைக்குப் போய் விட்ட  சோகத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு ஒரு ரிலாக்ஸான செய்தி இது.


புண்பட்ட மனதை கூல் செய்ய, நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவரை சிக்ஸர்களை விளாசிய சிங்கங்கள் குறித்த ஒரு தொகுப்பை இப்போது பார்ப்போம்.


நிக்கோலஸ் பூரன்




லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்தான் நிக்கோலஸ் பூரன். தனது அதிரடி ஆட்டத்தால் வானை நோக்கி பந்துகளைப் பறக்கவிட்டு சிக்ஸர்களைக் குவித்துக் கொண்டுள்ளார். அவரது மட்டையின் வீச்சு எதிரணியின் பந்துவீச்சாளர்களை திணறடித்து வருகிறது. இதுவரை 9 போட்டிகளில் ஆடியுள்ள பூரன் 31 சிக்ஸர்களை விளாசித் தள்ளியுள்ளார். நடப்பு தொடரில் அதிக சிக்ஸர்களை விளாசியுள்ள வீரர் இவர்தான்.


ஸ்ரேயஸ் ஐயர்




பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனான ஸ்ரேயஸ் ஐயர், மின்னல் வேகத்தில் ரன்களைச் சேர்ப்பதில் வல்லவர். அவர் களத்தில் இறங்கினாலே பவுண்டரிகளும் சிக்ஸர்களும்தான் என்ற நிலையை உருவாக்கி விடுகிறார். அவரது அதிரடியான ஆட்டம் ரசிகர்களுக்குப் பரவசத்தை அளிக்கிறது. இதுவரை8 போட்டிகளில் ஆடியுள்ள ஐயர், 20 சிக்ஸர்களை பறக்க விட்டுள்ளார்.


யஷஸ்வி ஜெய்ஸ்வால்




நிதானமான அதிரடி மன்னன். ஜெய்ஸ்வாலைப் பொறுத்தவரை, நிதானமாகத் தொடங்கி பின்னர் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் திறமையானவர். பந்துவீச்சாளர்களின் பலவீனத்தை அறிந்து சிக்ஸர்களை விளாசுவது இவரது தனிச்சிறப்பு. 9 போட்டிகளில் 20 சிக்ஸர்களைப் பறக்க விட்டுள்ளார்.


சூர்ய குமார் யாதவ்




மும்பை இந்தியன்ஸ் அணியின் சூர்ய குமார் யாதவ், இந்தப் பட்டியலில் 4வது இடத்தில் இருக்கிறார். இதுவரை 9 போட்டிகளில் 19 சிக்ஸர்களை விளாசியுள்ளார் சூர்ய குமார் யாதவ்.  கடைசி ஓவர்களில் அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்துவதில் இவர் கில்லாடி. நெருக்கடியான சூழ்நிலையிலும் சிக்ஸர்களை விளாசி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வது இவரது வழக்கம்.


பிரியன்ஷ் ஆர்யா




பஞ்சாப் கிங்ஸ் அணியின் இளம் வீரரான ஆர்யா அதிரடியாகத்தான் இந்தத் தொடரில் ஆடி வருகிறார். 8 போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்யா இதுவரை 18 சிக்ஸர்ளை அடித்துள்ளார். இந்த வீரர்கள் மட்டுமல்லாமல், இன்னும் பல திறமையான பேட்ஸ்மேன்கள் இந்த சீசனில் சிக்ஸர் மழை பொழிந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர். ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்பான சிக்ஸர் விருந்தாக அமைவதில் இவர்களது பங்கு மகத்தானது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வடதமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு இருக்காம் மக்களே: வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

அதிமுக கூட்டணியில் அமமுக.,விற்கு 6 சீட்டா?...உண்மையை உடைத்த டிடிவி தினகரன்

news

அதிமுக எத்தனை இடங்களில் போட்டி? பாஜக., கேட்பது என்ன?...வெளியான சுவாரஸ்ய தகவல்

news

தமிழ்நாட்டில் இருந்து ஒலிக்கும் இந்திய விவசாயிகளுக்கான குரல்: முதல்வர் முக ஸ்டாலின்!

news

அதி நவீன வசதிகளுடன் 20 வால்வோ பேருந்துகள்.. சொகுசாக இனி போகலாம்..!

news

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து.. புளூ பேர்ட் செயற்கைக்கோளுடன்.. விண்ணில் பாய்ந்த எல்.வி.எம்.3-எம்.6

news

ஆரவல்லி மலைத் தொடர்.. இமயமலைக்கே சீனியர்.. கணிமத் திருடர்களிடம் சிக்கி சிதையும் அவலம்!

news

2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில்.. 30% வாக்குகள் கிடைக்கும்.. தவெக சொல்கிறது!

news

டிசம்பர் 28 முதல் 30 வரை...இபிஎஸ் தேர்தல் பிரசாரம்...புதிய விபரம் வெளியீடு

அதிகம் பார்க்கும் செய்திகள்