சென்னை : தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் அஜித் தற்போது தனது 62வது படமான விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். டைரக்டர் மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்கி வருகிறார். த்ரிஷா, அர்ஜூன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வரும் இந்த படத்தின் ஷூட்டிங் அக்டோபர் மாதம் முதல் அஜர்பைஜானில் நடந்து வருகிறது.
விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் ஏறக்குறைய முடிந்து விட்டதாக சொல்லப்படுகிறது. பிப்ரவரி மாத இறுதிக்குள் படத்தின் முழு வேலைகளும் முடிந்து விடும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் அஜித்தின் அடுத்த படமான ஏகே 63 படத்தை, அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்க போகிறார் என கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அது மட்டுமல்ல அதற்கு அடுது்தபடியாக அஜித் நடிக்க உள்ள ஏகே 64 படத்தை டைரக்டர் வெற்றிமாறன் இயக்க போவதாக சொல்லப்படுகிறது. இது பற்றி வெற்றிமாறன், அஜித்துடன் பேசி வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுவரை இந்த படம் உறுதி செய்யப்படவில்லையாம். இதனால் அஜித்தை அடுத்தடுத்த இயக்க போகும் டைரக்டர்கள் யார் என்பது பற்றிய தகவல் வெளியாகி வருவதால் அஜித் ரசிகர்கள் செம குஷியாகி, இந்த படங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எப்போது வரும் என ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.
ஏகே 63, ஏகே 64 படங்களை யார் இயக்க போகிறார்கள் என உறுதியாகாத நிலையில், ஏகே 65 படத்தின் ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தையும் துவங்கி விட்டதாம். ஏகே 65 படத்தை இயக்க போகும் அந்த டைரக்டர் பற்றிய பேச்சு தான் தற்போது இந்திய சினிமாவையே வாயை பிளக்க வைத்துள்ளது. அந்த டைரக்டர் வேறு யாரும் அல்ல. கேஜிஎஃப் படத்தை இயக்கிய பிரஷாந்த் நீல் தான். இவர்கள் தான் அஜித்தின் 65 வது படத்தை இயக்க போகிறாராம். இந்த படத்திற்காக பிரஷாந்த் நீல், அஜித் இடையே முதல் கட்ட பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாம்.
அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் பிஸியாக இருப்பதால், அதை முடித்த பிறகு ஏகே 63, ஏகே 64 படங்களின் வேலைகளில் தீவிரம் காட்ட போகிறாராம். அதே சமயம் பிரஷாந்த் நீலும் தற்போது கைவசம் உள்ள என்டிஆர் 31, கேஜிஎஃப் 3, சாலர் 2 ஆகிய படங்களை இயக்கி முடிக்க போகிறாராம்.
இருவரும் தங்கள் கைவசம் உள்ள படங்களை முடித்த பிறகு ஏகே 65 படம் உறுதி செய்யப்பட்டு, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் உறுதியாகும் பட்சத்தில் கேஜிஎஃப் படத்திற்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு அஜித்திற்காக பிரஷாந்த் நீல், செம கதையை தயார் செய்வார் என சொல்லப்படுகிறது.
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கப் போகிறீர்களா.. கமல்ஹாசனே சொன்ன ஹேப்பி நியூஸ்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 08, 2025... நல்ல காலம் பிறக்குது
தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!
செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?
செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி
திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!
Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!
{{comments.comment}}