தென் தமிழகத்தில்.. ஜன 31 லேசான மழைக்கு வாய்ப்பு.. மேக்ஸிமம் வறண்ட வானிலையே நிலவுமாம்!

Jan 25, 2024,05:17 PM IST

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு வறண்ட வானிலேயே நிலவ வாய்ப்புள்ளதாகவும்,

தென் மாவட்டங்களில் ஜனவரி 31ஆம் தேதி ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தென்னிந்திய கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.


மேலும் தென் மாவட்டங்களில் வரும் ஜனவரி 31ஆம் தேதி ஒரு சில இடங்களில் லேசான மழை எதிர்பார்க்கலாம் .அதே சமயம் வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.




நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் உறைபனி நிலவ வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் நேற்று 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


சென்னையைப் பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது.


ஜனவரி 28 மற்றும் 29 தேதிகளில் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீச கூடும். அப்போது மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் இடையே 55 கிமீ வேகத்தில் காற்று வீச கூடும். இதனால் இப்பகுதிகளில் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

சமீபத்திய செய்திகள்

news

புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி

news

கடலும் கடலின் ஒரு துளியும்!

news

இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

அதிகம் பார்க்கும் செய்திகள்