Chick Peas.. கருப்புக் கொண்டைக் கடலை இருக்கே.. எவ்வளவு நன்மைகள் அதில் இருக்கு தெரியுமா?

Feb 19, 2025,04:11 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


சென்னை: கருப்பு கொண்டை கடலை முளைகட்டியது (chick peas) இருக்கே.. சூப்பரான ஒரு ஹெல்த்தியான உணவுங்க. அதில் எவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா.. வாங்க பார்க்கலாம்.


ஸ்ப்ரவுட்ஸ் ஈசியாக முளை கட்டுவது எப்படி என்று செய்முறையை இப்பொழுது பார்ப்போம்.


ஒரு நாள் இரவு முழுவதும் அல்லது 8 மணி நேரம் கொண்டைக்கடலையை நன்றாக கழுவி தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். பிறகு அடுத்த நாள் காலை நன்றாக தண்ணீர் வடித்து விட்டு ஒரு ஏர்டைட் கண்டெய்னர் அல்லது ஸ்டீல் பாக்ஸில் போட்டு மூடி வைக்கவும் .இரண்டு நாட்களில் அழகாக சூப்பரான ஸ்ப்ரவுட்ஸ் அதாவது கொண்டைக்கடலை முளை வந்துவிடும்.


முளைகட்டிய கொண்டைக்கடலையின் பயன்கள் .இத்தனை சத்துக்களா இதில் இருக்கின்றன!




முளைகட்டிய கொண்டைக்கடலை பயிரில் புரதம் ,வைட்டமின் ஏ ,சி ,பி6,K , நார்ச்சத்து, ரிபோவ் பிளவின், மாங்கனிசு ,துத்தநாகம், காப்பர் சத்து ,தையாமின் , பொட்டாசியம் ,பாஸ்பரஸ், மக்னீசியம் ஆகிய ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன.


நல்ல ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளது .இதில் உள்ள கடினமான கார்போஹைட்ரேட்டுகள் மெதுவாக(digestion) ஜீரணிக்கின்றன.அதனால் நம்ம ரத்த குளுக்கோஸ் அளவை ஒழுங்குப்படுத்தி அதில் உள்ள கரையக்கூடிய நார் சத்துகள் பெரிதும் உதவுகிறது. ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும் .இதில் கிளைசெமிக்  இன்டெக்ஸ் மிகக் குறைவு .எனவே, டயபடிஸ் இருப்பவர்களுக்கு பசி எடுக்காமல் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வு இருக்கும்.


முளைகட்டிய கொண்டைக்கடலையில் ஆண்டி ஆக்சிடென்ட்கள், அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது .அதனால் இதயத்தில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது எனவே இதய நோய் அபாயத்தை குறைக்கிறது. பெருங்குடல் ,மார்பகம்  மற்றும் நுரையீரல் புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது.


சருமம் பாதுகாக்க மிகவும் உறுதுணையாக உள்ளது: முளைக்கட்டிய கொண்டை கடலை இல் உள்ள மெக்னீசியம் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை தடுத்து வயதான தோற்றத்தை அளிக்கும் அறிகுறிகளை தடுக்கிறது. இது சுருக்கம் ஏற்படுத்தும் பிரீராடிக்கல்களை எதிர்த்துப் போராடும் அதனால் முதுமை தள்ளி போகவும் இளமையாக இருக்கவும் உதவுகிறது.


இத்தனை ஊட்டச்சத்து நிறைந்த முளைக்கட்டிய கொண்டைக்கடலையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டு நலமான நல்ல ஆரோக்கியமான வாழ்வு வாழலாம்.


இதுபோன்ற மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு இணைந்திருங்கள் தென் தமிழுடன்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பிரதமர் நரேந்திர மோடியின் மதுரை பொதுக்கூட்டம்... திடீர் என சென்னைக்கு மாற்றம்!

news

ஜன.,15 பொங்கல் தினத்தில் ஜனநாயகன் மேல்முறையீட்டு மனு விசாரணை

news

பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளையும் வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு

news

2026 சட்டசபை தேர்தல்... யாருடன் கூட்டணி?... மனம் திறந்த பிரேமலதா விஜயகாந்த்!

news

பழனி முருகன் கோவிலில் போராட்டம்: ஹெச். ராஜா உட்பட 12 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

news

இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

தமிழர்களின் குரலை அடக்க முடியாது...ஜனநாயகனுக்கு ஆதரவு குரல் கொடுத்த ராகுல் காந்தி

news

தமிழக அரசின் திருவள்ளுவர் தின விருதுகள் அறிவிப்பு

news

புதுசு புதுசா யோசிக்கிறாங்களே...சீனாவில் உயிருடன் இருப்பதை அப்டேட் செய்ய புதிய "ஆப்"

அதிகம் பார்க்கும் செய்திகள்