சென்னை: 2022ம் ஆண்டு சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் தன்னை காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி சத்யபிரியாவை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கில் சதீஷ் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றியவர் மாணிக்கம். இவருடைய மகள் சத்யபிரியாவை, அதே பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் தயாளனின் மகன் சதீஷ் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.

2022ம் ஆண்டு அக்டோபர் 13ம் தேதி, சத்யபிரியா கல்லூரிக்குச் செல்வதற்காக சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் நின்றிருந்த போது, சதீஷூம் அங்கு வந்துள்ளார். அப்போது தன்னை காதலிக்குமாறு சதீஷ் வற்புறுத்தியுள்ளார். அதற்கு சத்யபிரியா தொடர்ந்து மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரம் அடைந்த சதீஷ், அந்த வழியாக வந்த மின்சார ரயில் முன்பு சத்யபிரியாவை தள்ளிவிட்டுள்ளார். இந்த சம்பவத்தில் ரயில் மோதியல் சத்யபிரியா சம்பவ இடத்திலேயே இறந்தார்.
சதீஷ் உடனடியாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்தனர். 70 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், சென்னை அல்லிக்குளத்தில் உள்ள மகளிர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி இன்று தீர்ப்பளித்தார். சதீஷை குற்றவாளி என்று அறிவித்த நீதிபதி, சதீஷூக்கான தண்டணை விவரம் வரும் 30ம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கனிமொழி தலைமையில்... திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைப்பு!
2026 ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு
ஐபிஎஸ் 2026க்கு பிறகு தோனி ஓய்வா?...கிரிக்கெட் பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல்
டெல்லியில் கட்டாயமாகிறது work from home...ஊழியர்கள் மகிழ்ச்சி
அமைதியாகவே இருந்தால் எப்படி? ஏதாவது சொல்லுங்க...விஜய்யை விளாசிய அண்ணாமலை
குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கலான சாந்தி மசோதா...காங்கிரஸ், திமுக கடும் எதிர்ப்பு
ஆஸ்கார் 2026 ஷார்ட்லிஸ்ட் வெளியானது...பட்டியலில் இடம்பிடித்த ஒரே ஒரு இந்திய படம்
விஜய் பேசக்கூடிய இடத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பாதுகாப்பு அரண் செய்யப்பட்டுள்ளன: செங்கோட்டையன்
True love has no expiry date.. உண்மைதானே.. காதலுக்கு எக்ஸ்பைரி வைக்க முடியுமா!!
{{comments.comment}}