டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தேஜாஸ் போர் விமானத்தில் பறந்தது குறித்து சுப்பிரமணியம் சாமி கிண்டலடித்துள்ளார். ஆனால் அவருக்கு நெட்டிசன்கள் சரமாரியாக பதிலடி கொடுத்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி சில நாட்களுக்கு முன்பு பெங்களூர் வந்திருந்தார். அங்குள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்திற்கு விஜயம் செய்த அவர் அங்குள்ள திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார். அதன் பின்னர் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட தேஜாஸ் போர் விமானத்தில் அவர் பயணித்தார்.
இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி பேசு பொருளாகின. குறிப்பாக விமானத்தில் பறந்தபடி வானில் பிரதமர் மோடி கையசைக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின. இதுகுறித்து பலர் விமர்சனங்களும் கூறி வந்தனர்.
இந்த நிலையில் சுப்பிரமணியம் சாமியும் ஒரு கருத்தைக் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில், நான் ஒரு விமானப்படை அதிகாரியிடம் பேசினேன். அப்போது அவர் என்னிடம் கூறுகையில், 25,000 அடி உயரத்தில், கிளாஸ் கவர் கூட போடாமல் பிரதமர் நரேந்திர மோடி பறப்பது போன்ற புகைப்படம் போலியானது. அவ்வளவு உயரத்தில் கிளாஸ் கவர் போடாமல் பயணித்தால் நம்மைத் தூக்கிக் கொண்டு வந்து அப்படியே கீழே எறிந்து விடும் என்றார் அவர். இதை பிரதமர் அலுவலகத்தால் மறுக்க முடியுமா? என்று கேட்டுள்ளார் சாமி.
ஆனால் சாமியின் கருத்தை மறுத்து பலரும் அதில் கமெண்ட் போட்டுள்ளனர். நல்லா பாருங்க சார் கிளாஸ் கவர் இருக்கு.. அதோட பிரதிபலிப்பு கூட தெரியுது பாருங்க. உங்க மதிப்பை நீங்களே குறைச்சுக்காதீங்க என்று பலர் சாமியை கண்டித்துள்ளனர். இன்னொருவரோ, சுவாமிஜி உங்களுக்கு என்னாச்சு என்று நக்கலடித்துள்ளார். இன்னும் ஒருவரோ, முதல்ல உங்க கண்ணாடியை மாத்துங்க ஜி என்று கிண்டலடித்துள்ளார்.
உண்மையில் கிளாஸ் கவர் எல்லாம் பக்காவாக போட்டுத்தான் பிரதமர் மோடி அந்த விமானத்தில் பறந்தார். இதை அந்த வீடியோவிலேயே தெளிவாகக் காண முடியும். தரையில் இருந்தபோது, புறப்படுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தபோது எடுத்த புகைப்படத்தை வைத்து சாமி பேசுவதாக தெரிகிறது.
சுப்பிரமணியம் சாமிக்கும், பாஜக மேலிடத்திற்கும் இடையே தற்போது டேர்ம்ஸ் சரியில்லை. அவரை பாஜகவினர் யாரும் கண்டு கொள்வதும் கிடையாது. பிரதமர் மோடியை மட்டுமல்லாமல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் கூட கடுமையாக விமர்சிப்பது சாமியின் வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}