சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் கரும்பு ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அதிக அளவிலான சரக்குககளை லாரிகளில் ஏற்றிச் செல்லும்போது வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அவை கவிழும் அபாயங்கள் அதிகம் உள்ளன. ஆனாலும் இதை பலரும் பொருட்படுத்துவதில்லை. தேவைக்கு அதிகமான லோடு ஏற்றிக் கொண்டு போய் விபத்துக்குள்ளாகும் செயல்கள் நிற்காமல் தொடர்ந்து நடந்து கொண்டுதான் உள்ளன.

இந்த நிலையில் சத்தியமங்கம்லத்தில், வேகமாக வரும் வாகனங்கள் தங்கள் வேகத்தை கட்டுப்படுத்துவதற்காக சாலை நடுவே வைத்திருக்கும் பேரிகாடை தாண்டி ஒரு லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியின் முன்னர் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் நூலிழையில் உயிர் பிழைத்தனர்.
அந்த லாரியானது வேகமாக வந்து கொண்டிருந்தது. பேரிகாட் பகுதியில் லாரி வந்து வளைய முயன்றபோது திடீரென ஒரு பக்கமாக வண்டி குடை சாய்ந்து அப்படியே கவிழ்ந்தது. லாரியில் இருந்த கரும்புகள் சீட்டுக் கட்டு போல அப்படியே சரிந்து சாலையோரம் விழுந்தன. இதனால் சிறிது நேரத்திற்கு அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அப்பகுதியில் இருந்து பொதுமக்கள் அங்கு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.இந்த விபத்து குறித்து தகவல் தெரிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.
"தலஜோ".. சாலமன் பாப்பையா ஐயாவின் மறக்க முடியாத வகுப்பறை நினைவுகள்!
தமிழறிஞர் சாலமன் பாப்பையா மறைவு: தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் இரங்கல்!
மீண்டும் நீ வேண்டும் பாரதி!
Vinayagar Chathurthi Special: அழகான அலங்காரம்.. மஞ்சள் பிள்ளையார் செய்வது எப்படி?
கொந்தளித்த திருமா.. கோபம் திமுக மீதா.. முதல்வர் விஜய் மீதா?.. இது தான் காரணமா?
பிரபல பட்டிமன்ற பேச்சாளர் தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்
அவசியம் என்றால் தவறான பக்கத்தை கிழிக்கலாம்!
சாலை ஓரம் எல்லாம் கற்கண்டு குவியல், ருசிக்க முடியுமோ?
மூவேந்தர் வீரமும் முண்டாசு கவிக்குள்!
{{comments.comment}}