வாஷிங்டன்: விண்வெளியில் நடந்த முதல் பிரஸ் மீட் என்ற பெருமை சுனிதா வில்லியம்ஸுக்குக் கிடைத்துள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் நிலையில் இருந்தாலும் கூட அங்கிருந்தபடி அமெரிக்க செய்தியாளர்களிடம் மகிழ்ச்சியாக உரையாடியுள்ளார் சுனிதா வில்லியம்ஸ்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் 5ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்குப் பயணப்பட்டார்கள். எட்டு நாட்களில் திரும்பி வருவதாகத்தான் திட்டம். ஆனால் அவர்கள் பயணம் செய்த போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தின் மூலம் மீண்டும் பூமிக்குத் திரும்புவதில் தொழில்நுட்பச் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து சுனிதா மற்றும் புட்ச் ஆகியோர் இல்லாமல் ஸ்டார்லைனர் மட்டும் பூமிக்குத் திரும்பியது. தற்போது சுனிதாவும், புட்ச்சும் சர்வதேச விண்வெளி நிலையத்திலேயே தங்கியுள்ளனர். எட்டு மாதங்கள் கழித்தே அவர்கள் திரும்புவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விண்வெளி நிலையத்திலிருந்தபடி செய்தியாளர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாடினார்கள் சுனிதாவும் புட்ச்சும். குறிப்பாக சுனிதா வில்லியம்ஸ் மிகுந்த மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் பேசினார். அவர் கூறுகையில், வாழ்க்கை அவ்வளவு கஷ்டமாக இல்லை. ஏற்கனவே நாங்கள் பலநாட்கள் இங்கே கழித்துள்ளதால் இப்போது கடினமாக அது தோன்றவில்லை.
இது எனக்கு மகிழ்ச்சி தரும் இடம். விண்வெளியில் இருப்பதை விரும்புகிறேன். முன்பே வந்திருக்க வேண்டியது. ஆனால் அது முடியாமல் போனதால், அடுத்த வாய்ப்புக்காக காத்திருக்கிறோம். உடனடியாக பூமிக்குத் திரும்ப முடியாது என்று தெரிய வந்ததும் கொஞ்சம் பதட்டமடைந்தது உண்மைதான். எனது குடும்பத்தினர், எனது தாயார் உள்ளிட்டோர் நினைவுக்கு வந்தனர். அதேசமயம், இப்படியெல்லாம் நடக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளன என்பதால் நாங்கள் இயல்பாகி விட்டோம்.
அமெரிக்க அதிபர் தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். நானும் புட்ச்சும் இங்கிருந்தபடியே வாக்களிப்போம். அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்க வேண்டியது ஒவ்வொரு அமெரிக்கரின் கடமையாகும். அந்த வகையில் எங்களது கடமையை நாங்கள் இங்கிருந்தபடியே ஆற்றுவோம். இதற்கான வழிகளை நாசா செய்துள்ளது. விண்வெளியிலிருந்து வாக்களிக்கவிருப்பது திரில்லாக உள்ளது. இது கடமையாச்சே.. விட்ர முடியுமா என்று கூறினார் சுனிதா வில்லியம்ஸ்.
சுனிதாவும், புட்ச்சும், வருகிற பிப்ரவரி மாதம்தான் பூமிக்குத் திரும்பவுள்ளனர். எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ9 விண்கலம் மூலமாக அவர்கள் பூமிக்குத் திரும்புவார்கள்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}