டெல்லி: சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்த தேர்தல் முறைகேட்டை கடுமையாக கண்டித்த உச்சநீதிமன்றம், முறைகேட்டின் மூலமாக பாஜக வெற்றி பெற்றது செல்லாது என்று தீர்ப்பளித்தது. ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் வெற்றி பெற்றதாக அறிவித்துளளது. தேர்தல் அதிகாரி அனில் மாசியை குற்றவாளி என்றும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
சண்டிகர் மாநகராட்சி மேயர் பதவிக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக சார்பில் மனோஜ் சோங்கரும், ஆம் ஆத்மி - காங்கிரஸ் அடங்கிய இந்தியா கூட்டணி சார்பில் குல்தீப் குமாரும் போட்டியிட்டனர். இந்தியா கூட்டணிக்கு 20 கவுன்சிலர்கள் இருப்பதால் குல்தீப் எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் குல்தீப் குமார் தோல்வி அடைந்ததாக தேர்தல் அதிகாரி அனில் மாசி அதிரடியாக அறிவித்தார்.

மனோஜ் சோங்கருக்கு ஆதரவாக 16 வாக்குகளும், குல்தீப் குமாருக்கு ஆதரவாக 12 வாக்குகளும் விழுந்ததாகவும், 8 வாக்குகள் செல்லாது என்றும் அனில் மாசி அறிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம் பகிரங்கமாக, அந்த எட்டு வாக்குச் சீட்டையும் செல்லாததாக மாற்றும் வகையில் தனது கைப்பட தேர்தல் அதிகாரியே சேதப்படுத்ததினார். இது சிசிடிவி கேமராவிலும் பதிவானது.
இந்த பட்டப் பகல் முறைகேட்டை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது தேர்தல் அதிகாரியின் செயலுக்கு நீதிபதிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். அவரை நேரில் ஆஜராகவும் பெஞ்ச் உத்தரவிட்டது. அதன்படி தேர்தல் அதிகாரி அனில் மாசி கோர்ட்டில் ஆஜரானார். அவரிடம் தலைமை நீதிபதி சரமாரியான கேள்விகளை கேட்டார். உங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
மேயர் தேர்தலில் பதிவான அனைத்து வாக்குகளையும் நேரில் சமர்ப்பிக்குமாறும் கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி இன்று கோர்ட்டில் வாக்குகள் அனைத்தும் சமர்ப்பிக்கப்பட்டன. தேர்தல் அதிகாரி சேதப்படுத்திய வாக்குகள் உள்பட அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டன. அதன் முடிவில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்ட குல்தீப் குமார் வெற்றி பெற்றதாகவும் நீதிமன்றம் அறிவித்தது.
தேர்தல் அதிகாரி மாசி குற்றவாளி என்று அறிவித்த சுப்ரீம் கோர்ட், கோர்ட்டில் வேண்டும் என்றே தவறான தகவலைக் கொடுத்து கோர்ட்டை அவமதித்ததால் அவர் மீது கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}