சென்னை: ஜாமின் கிடைத்த மறுநாளே அமைச்சர் பொறுப்பு ஏற்றது ஏன்? என அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக கூறி, செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது. செந்தில் பாலாஜி மீது திடீரென நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் செந்தில் பாலாஜி பல மணி நேர விசாரணைக்குப் பின்னர் இரவில் அமலாக்கத் துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அதற்கு பிறகு சில மாதங்களில் தன்னுடைய அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்தார்.

தன் மீதான பண மோசடி வழக்கில் தன்னுடைய உடல்நிலையை காரணம் காட்டி பல முறை செந்தில் பாலாஜி சார்பில் ஜாமின் கேட்கப்பட்டது. ஆனால் 58 முறை அவருக்கு ஜாமின் மறுக்கப்பட்டது. இதனையடுத்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் ரூ.25 லட்சம் இரு நபர் ஜாமினில், நிபந்தனைகளுடன் அவருக்கு ஜாமின் வழங்கியது. இதனையடுத்து 15 மாத சிறை வாழ்க்கைக்கு பின்னர் செந்தில் பாலாஜி வெளியில் வந்தார்.
ஜாமினில் வெளியில் வந்த 3 நாட்களில் அவருக்கு அமைச்சர் பதவி வழக்கப்பட்டது. அதிலும் அவர் ஏற்கனவே வகித்து வந்த மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறைக்கே அமைச்சரானார். இதனையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்யக் கோரி வித்யாகுமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு செய்தார். அந்த மனு மீதான விசாரணை நீதிபதி அபே ஓகா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி ஓகா கூறுகையில், மனுதாரரின் குற்றச்சாட்டில் நியாயம் உள்ளது. பல வழக்குகள் நிலுவையில் உள்ள போது அமைச்சராக எப்படி பொறுப்பேற்றக முடியும். ஜாமின் கிடைத்தவுடன் அமைச்சராகி விட்டீர்கள். குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டவர்கள் அமைச்சரானால் வழக்கின் சாட்சிகள் பயப்படுவார்கள். ஜாமின் கிடைத்தவுடன் அமைச்சராகும் விவகாரம் மிக தீவிரமான விஷயம் என்பதால் அதனை தீவிரமாக கருதுவதாக கூறி இந்த மனு மீது செந்தில் பாலாஜி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, இந்த வழக்கு விசாரணையை டிசம்பர் 13ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
2026ம் ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டம்.. நாளை கூடுகிறது.. ஆளுநர் உரையாற்றுவாரா?
அடுத்த திட்டம் என்ன?...ஆதரவாளர்களுடன் சசிகலா தீவிர ஆலோசனை
கரூர் வழக்கு.. டெல்லி சிபிஐ விசாரணையில் நடப்பது என்ன.. விஜய்யிடம் கேட்கப்படும் கேள்விகள் என்னென்ன?
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன30ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு.. இதுவரை 12.80 லட்சம் பேர் மனு
மீண்டும் மீண்டும் தள்ளிப் போகும் தெறி ரீ ரிலீஸ்...காரணம் இது தானா?
71 மாவட்டங்களுக்கும் தலைவர்கள்.. ஒரு வழியாக அறிவித்தது காங்கிரஸ்!
தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் வெள்ளி விலை... இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.1,360 உயர்வு
அமைதி .. சத்தம் இல்லாமல் வந்தபோது...!
சிவபெருமானின் முழு அருளை பெற இந்நன்நாளை தவற விடாதீர்கள்
{{comments.comment}}