- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: ஒவ்வொரு நாளும் ஒரு புதுப் பிறப்பு போலத்தான்.. அந்த தினத்தை தொடங்குவதையும் உற்சாகமாகத்தானே நாம் தொடங்க வேண்டும்.. அதுக்கு நமக்குக் கை கொடுப்பது டீ தாங்க.. அதிலும் லெமன் டீ குடிச்சுப் பாருங்க.. அன்னிக்கு முழுக்க நீங்க ஃபிரஷ்ஷா உணருவீங்க, ஹெல்த்துக்கும் ரொம்ப நல்லது.
லெமன் டீயோட இந்த நாளை தொடங்கலாமா?

தேவையான பொருட்கள் :
எலுமிச்சை - 1/2 பழம்
டீ தூள் - 1 ஸ்பூன்
ஏலக்காய் - 3 (தட்டி வைத்துக் கொள்ளவும்)
தண்ணீர் - 2 கப்
புதினா - 2 இலை (தேவையென்றால்)
தேன் அல்லது சர்க்கரை - தேவைக்கேற்ப
செய்முறை :
* 2 கப் தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி, அதோடு ஒரு ஸ்பூன் டீ தூள் சேர்க்க வேண்டும்.
* தட்டிய ஏலக்காயை அதோடு சேர்த்து சிறிது நேரம் அவற்றை கொதிக்க விட வேண்டும்.
* இறக்கி அவற்றை வடிகட்டி, அதில் எலுமிச்சை சாறு பிழிந்து, புதினா இலைகளை போட்டு, நாட்டு சர்க்கரை அல்லது தேன் கலந்து பரிமாறலாம்.
* லெமன் டீ உடலுக்கு புத்துணர்ச்சியை தரும். வளர்சிதை மாற்றத்தை தூண்டக் கூடியது. இந்த லெமன் டீயை தொடர்ந்து குடித்து வந்தால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். மலச்சிக்கல் தீரும். பசியை தூண்டும்.
Have a wonderful day friends.. உங்க நட்பு வட்டாரத்துக்கும் இந்த டீயை ரெக்கமன்ட் பண்ணுங்க!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தை புறக்கணித்த 30 உறுப்பினர்கள்
பாஜகவின் புதிய தேசிய தலைவராக நிதின் நபின் பதவியேற்பு
பல ஆயிரம் கோடி லஞ்சம்... இது தான் திமுக அமைச்சர் கே.என். நேருவின் சாதனைகள்: அண்ணாமலை
கவர்னரின் மைக் ஆஃப் செய்யப்படவில்லை...சபாநாயகர் அப்பாவு விளக்கம்
கள்ளக்குறிச்சி ஆற்றுத் திருவிழாவில் சிலிண்டர் வெடிப்பு - பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
நெற்றிக்கண் திறப்பினும்....!
வசந்த பஞ்சமி 2026.. சரஸ்வதி தேவியை வழிபடுவோம்.. ஞானம் பெறுவோம்
தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் வெள்ளி விலை... இதோ இன்றைய விலை நிலவரம்!
பெண்ணே நிமிர்ந்து பார்!
{{comments.comment}}