சூடுபிடிக்கும் சட்டசபை தேர்தல் பணிகள்.. டிசம்பர் 15 முதல் அஇஅதிமுக விருப்பமனு!

Dec 11, 2025,10:59 AM IST

- சகோ. வினோத்குமார்


சென்னை: 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அஇஅதிமுக சார்பில் விருப்பமனு டிசம்பர் 15ஆம் தேதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுக்களை வழங்குவதற்கான இறுதி தேதி டிசம்பர் 23 என அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியில் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் சுற்றுப்பயணங்கள், மக்கள் சந்திப்பு, பூத் கமிட்டி விரிவாக்கம் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றன. 


கூட்டணிகளை வலுப்படுத்தும் பணியில் திமுக, அதிமுக, பாஜக, தவெக ஆகியவை தீவிரம் காட்டி வருகின்றன. இதில் திமுக கூட்டணி ஏற்கனவே தெளிவாக உள்ளது. கூடுதலாக சில கட்சிகளை சேர்க்க திமுக ஆர்வம் காட்டி வருகிறது. அதிமுக கூட்டணியில் தற்போது பாஜக மட்டுமே பெரிய கட்சியாக உள்ளது. மேலும் சில கட்சிகளை இணைத்து பலம் சேர்க்க அது ஆர்வம் காட்டி வருகிறது. தவெக கூட்டணிக்காக காத்திருக்கிறது. ஆனால் இதுவரை அதில் எந்தத் தெளிவும் இல்லை. நாம் தமிழர் கட்சி வழக்கம் போல தனி ஆவர்த்தனம் செய்து வருகிறது.




திமுக தரப்பில் தேர்தலை மையமாக வைத்து மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை, பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் ஆலோசனை என கட்சித் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிரம் காட்டி வருகிறார். அதிமுக தரப்பில் கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பொதுக்கூட்டங்கள், மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை என தீவிரமாக உள்ளார். தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் மக்களைச் சந்தித்து வருகிறார்.


இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் கட்சிகள் இறங்கத் தொடங்கியுள்ளன. அதாவது வேட்பாளர் தேர்வுக்கான வேலைகளிலும் இறங்க ஆரம்பித்து விட்டன. சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்பாளராக களம் இறங்குவதற்கு கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடமிருந்து விருப்பமனு  பெற்று அவர்களிலிருந்து ஒருவரை தேர்வு செய்வது ஒவ்வொரு தேர்தலிலும் நடைபெறும் ஜனநாயக நடைமுறையாகும்.


காங்கிரஸ் மற்றும் அமமுக சார்பில் நேற்று முதல் விருப்பமனு புறப்பட்டு வந்தது.  நேற்று அதிமுக  பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் டிசம்பர் 15 முதல் 23 வரை விருப்பமான பெறப்படும் என கூறியுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளாவை சேர்ந்த தொண்டர்கள் இதில் விருப்பம் என அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.


நேற்றுதான் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டங்கள் நடந்தன. இந்த நிலையில் விருப்ப மனுக்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு அதிமுக தரப்பு வேகம் கூட்டியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆட்டுக்கொட்டகையில் பிறந்து வளர்ந்து.. கொடூரனுக்கு எதிராக கொதித்தெழுந்த பெத்தனாட்சி!

news

சுப்ரியா சாகு அவர்களுக்கு ஐ.நா. விருது.. தமிழ்நாடு பெருமை கொள்கிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

நாமும் உணரும் திறனும்.. (Our sensitivity)

news

தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்... இன்றைய விலை நிலவரம் இதோ

news

சூடுபிடிக்கும் சட்டசபை தேர்தல் பணிகள்.. டிசம்பர் 15 முதல் அஇஅதிமுக விருப்பமனு!

news

சுடச் சுட.. சுவையான நெய் சாதம் ரெடி.. குழந்தைகளே வாருங்கள் ருசிக்கலாம்!

news

தொழுதேத்தும் பத்மநாபன்.. யாதவ குல திலகன்.. மதுசூதனன் மாயன்!

news

தமிழன் என்றாலே வீரம்.. அந்த வீரத் திமிருக்கு சொந்தக்காரன்.. முறுக்கு மீசைக்காரன் பாரதியார்!

news

பச்சை பயிறு ஈரல் கிரேவி.. சத்தியமா நம்புங்க.. இது சைவ மெனுதான்.. என்னங்க சொல்றீங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்