சஸ்பெண்ட் செய்யப்பட்ட.. நடிகை காயத்ரி ரகுராம்.. பாஜகவிலிருந்து நிரந்தரமாக நீக்கம்!

Jan 14, 2023,10:14 AM IST
சென்னை: நடிகை காயத்ரி ரகுராம் தமிழ்நாடு பாஜகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.



நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் பாஜகவில் இணைந்து செயல்பட்டு வந்தார். ஆரம்பத்தில் புயல் வேகத்தில் செயல்பட்டு வந்த அவர், அண்ணாமலை தலைவரான பின்னர் வேகம் குறைய ஆரம்பித்தார். இதற்குக் காரணம், அவருக்கும், அண்ணாமலைக்கும் ஒத்துப் போகவில்லை என்று கூறப்பட்டது.

இதனால் தனது வேகத்தைக் குறைத்துக் கொண்ட காயத்ரி ரகுராம், சில காலம் அமைதியாக இருந்து வந்தார். ஆனால் அவருக்கு கட்சி மேலிடம், அயல்நாடு மற்றும் வெளி மாநில தமிழர் நலப் பிரிவு மாநிலத் தலைவர் பதவியை வழங்கியது. இதனால் உற்சாகமாக மீண்டும் களம் குதித்தார்.

இந்த நிலையில்தான் டெய்சி சரண் - சூர்யா இடையிலான ஆபாசப் பேச்சு ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த விவகாரத்தில் டெய்சிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார் காயத்ரி. மேலும் அண்ணாமலைக்கு எதிராகவும் மறைமுகமாக கருத்துக் கூறி பேச ஆரம்பித்தார். இதனால் அவரை தமிழ்நாடு பாஜக சஸ்பெண்ட் செய்தது. 

ஆனால் தான் கட்சியிலிருந்து விலகுவதாக காயத்ரி அறிவித்தார். அதன் பிறகு தொடர்ந்து சமூக வலைதளங்களில் அண்ணாமலைக்கு சரமாரியாக கேள்விகள் எழுப்பி வந்தார். அண்ணாமலையின் வார் ரூம் பற்றிப் பேசி வந்தார். துபாய் ஹோட்டல் மேட்டர் என்று பேசி வந்தார். இதனால் தொடர் சர்ச்சை நீடித்து வந்தது.

சமீபத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை வெகுவாக புகழ்ந்தும் அவர் பேசியிருந்தார். இந்த நிலையில் காயத்ரியை கட்சியை விட்டு நிரந்தரமாக நீக்கியுள்ளது பாஜக தலைமை. இதுதொடர்பாக தமிழ்நாடு பாஜக மாநில தலைமை அலுவலக பொறுப்பாளர் ஜே. லோகநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  6 மாத காலம் கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டிருந்த காயத்ரி ரகுராம் அவர்கள், தனது சுய விருப்பத்தின் பெயரில் விலகுவதாக சமூக வலைத் தளங்களில் பதிவிட்டு வந்துள்ளார். கட்சியிலிருந்து அத்துடன் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் அவர்களுக்கு வாட்ஸ் அப்பில் "நான் ராஜினாமா செய்கிறேன்" என்று செய்தியும் அனுப்பி இருந்தார். 

அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு மாநில தலைவர் K.அண்ணாமலை Ex.IPS அவர்களின் ஒப்புதலின்படி காயத்ரி ரகுராம் அவர்கள் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து கட்சிப் பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக விடுவிக்கப்படுகிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது எதிர்கால முயற்சிகளும், பணிகளும் வெற்றியடைய வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

இனி அடுத்த கட்டமாக காயத்ரி ரகுராம் என்ன செய்யப் போகிறார் என்பது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் சேருவாரா அல்லது திமுகவில் இணைவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. எப்படி இருந்தாலும், நிச்சயம் அவர் அண்ணாமலைக்கு எதிரான தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று உறுதியாக நம்பப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்