சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.
நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இதுவாகும்.
லோக்சபா தேர்தல் வரும் நிலையில் தமிழநாடு அரசின் பட்ஜெட்டுக்கு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இன்று தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் தொடர்பான முத்திரைச் சின்னம் நேற்று வெளியிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து, என்னென்ன தலைப்புகளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்ற அறிவிப்பும் வெளியானது. அதன்படி, சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமை வழிப் பயணம், தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் ஆகிய அம்சங்களில் மாபெரும் 7 தமிழ்கனவுகள் இடம்பெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், நாளை வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தாக்கல் செய்வார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் 4வது பட்ஜெட் இது. முதல் 3 பட்ஜெட்டுகளை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பிரம்மாண்ட பேரணி
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: வாக்குப்பதிவு நிறுத்தம்...போலீசுடன் திமுக வாக்குவாதம்!
தென்தமிழ் தலையங்கம்: டேட்டிங் ஆப் முதல் குழந்தைப் பேறு வரை.. சிங்கப்பூருக்கு வந்த சோதனை!
உன்னை என் மனதுக்குள் வைப்பேன் அன்பே!
சிந்தனைச் சிதறல்.. உணவையும் உறவையும் உள்ளன்போடு பகிர்வதில் நிறைவு காண்போம்!
நெருப்பும் நீரும்!
ஸ்வீட் மச்சான்.. அட நம்ம ஸ்மித் மச்சார்தாங்க.. இந்தியன் டா.. காலரைத் தூக்கி விட்டுக்கலாம்!
மனம் கொத்திப் புடவை .. ஒரு நிமிடக் கதை (28)
Assembly By Election: நாளை மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: அனைத்து ஏற்பாடுகளும் தயார்
{{comments.comment}}