நாகப்பட்டனம்: இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்கள் மீது கடுமையாக தாக்கியதால் நமது மீனவர்கல் படுகாயம் அடைந்தனர்.
வேதாரண்யம் கோடியக்கரைக்கு அருகே உள்ள அக்கரப்பட்டியை சேர்ந்த விஜயகுமாருக்கு சொந்தமான பைபர் படகில் ராஜேந்திரன், ராஜ்குமார், நாகலிங்கம், ஆகியோர் நேற்று மதியம் மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது கோடியக்கரை தென்கிழக்கே மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது எதிரே இரண்டு பைபர் படகுகளில் வந்த 6 இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்கள் மூவரையும் வழிமறித்து கத்தி மற்றும் கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளனர்.
பிறகு பைபர் படகில் இருந்த வலை, மீன்கள், மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை இலங்கை கொள்ளையர்கள் எடுத்து சென்று ஓடிவிட்டனர். இவர்கள் கொள்ளையடித்துச் சென்ற பொருட்கள் மூன்று லட்சம் மதிப்பு உடையவை என்று மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் பலத்த காயமடைந்த ராஜேந்திரன், ராஜ்குமார், நாகலிங்கம் ஆகிய மூன்று மீனவர்களும் கடற்கரைக்கு வந்தனர். சக மீனவர்கள் அவர்களை வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அதேபோல, பெருமாள் பேட்டையை சேர்ந்த குமார் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் குமார் மற்றும் ஜெகன் லட்சுமணன் ஆகிய மூன்று பேரும் அதே பகுதியில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். அப்போது இவர்களையும் தாக்கி இலங்கை கடற் கொள்ளையர்கள் இவர்களுக்கு சொந்தமான ஒரு லட்சம் மதிப்புள்ள வலை, மீன்பிடி சாதனங்கள், செல்போன் உள்ளிட்ட உபகரணங்களை கொள்ளையடித்து சென்றனர்.
வேதாரண்யம் மீனவர்களிடம் அடுத்தடுத்து இலங்கை கொள்ளையர்கள் தாக்கி கொள்ளையடித்த சம்பவம் மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!
முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!
திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி
கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா
கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி
தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை
{{comments.comment}}