சென்னை : 11ம் வகுப்பு பொதுத் தேர்வு முறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது நடப்பு கல்வி ஆண்டிலேயே நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் சார்பில் புதிய கல்விக் கொள்கையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அதில் பல முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.
தமிழக அரசின் புதிய கல்வி கொள்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

- தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையே தொடரும்.
- 11ம் வகுப்பு பொதுத் தேர்வு முறை ரத்து செய்யப்படுகிறது.
- இனி 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத் தேர்வு நடத்தப்படும். இது நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தப்படும்.
- 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்ற முறை தொடரும்
இதுதவிர 3,5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது. நீட் தேர்வு இருக்கக் கூடாது. கல்வி மாநில பட்டியலில் வர வேண்டும். தொடக்க நிலை முதல் பல்கலைகழக நிலை வரை தமிழ் வழிக் கல்வியை வழங்குதல் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் கொண்டதாக மாநில கல்வி கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.
எக்காரணம் கொண்டும் யாரும் கல்வியை பாதியில் கைவிடக் கூடாது என்றும் புதிய கல்வி கொள்கை வெளியீட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}