புதுச்சேரி: புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் சென்று கொண்டிருந்த தமிழக அரசுப் பேருந்து திடீரென சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. திடீரென நடந்த இந்த விபத்தில் சிக்கி 20 பயணிகள் காயமடைந்தனர்.
புதுச்சேரியில், கிழக்கு கடற்கரை சாலைப் பகுதியில், பிள்ளை சாவடி என்ற இடத்தில் தமிழக அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்து நிலை தடுமாறி, தறி கெட்டு ஓடி சாலை நடுவே இருந்த சாலைத் தடுப்பு மீது மோதி நின்றது.
வேகமாக போய் மோதியதால் பேருந்தின் முன் பக்கம் தடுப்புக்குள் மாட்டிக்கொண்டது. அதன் முன் பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டது. பேருந்தில் உள்ள பயணிகள் 20 க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது.
நல்ல வேளையாக பெரிய அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை .
படுகாயம் அடைந்தவர்களை புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைக்காக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கிழக்குக் கடற்கரைச் சாலை எப்போதுமே அதிக விபத்துக்கள் நடக்கும் பகுதியாகவே தொடர்வது மக்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}