காலை உணவுத் திட்டம்.. ஆகஸ்ட் 25ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் விரிவாக்கம்

Aug 15, 2023,10:12 AM IST
சென்னை: தமிழ்நாட்டில் தற்போது ஆரம்பப் பள்ளிகளில் அமலில் இருக்கும் காலை உணவுத் திட்டம் இனி மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துத் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது. ஆகஸ்ட் 25ம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.

சென்னையில் இன்று நடந்த சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோது முதல்வர் மு.க.ஸ்டாலின் இதை அறிவித்தார்.



சென்னை கோட்டை கொத்தளத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அவர் சுதந்திர தின உரையை நிகழ்த்தினார். அப்போது அரசின் சாதனைகளை விவரித்துப் பேசினார். 
தனது பேச்சின்போது பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

முக்கியமாக, பெண்களுக்கான இலவச பஸ் பயணத் திட்டத்திற்கு, விடியல் பயணத் திட்டம் என்று பெயரிடப்பட்டிருப்பதாக முதல்வர் அறிவித்தார்.

அடுத்ததாக, காலை உணவுத் திட்டத்தை மாநிலம் முழுவதும் உள்ள ஆரம்பப் பள்ளிகளுக்கு விரிவுபடுத்துவதாக முதல்வர் அறிவித்தார். ஆகஸ்ட் 25ம் தேதி முதல் இது அமலுக்கு வரும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.

தற்போது காலை உணவுத் திட்டத்தின் கீழ் 13 வகையான உணவு வகைகள் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படுகிறது. அதன்படி மாணவர்களுக்கான உணவுப் பட்டியல்:

திங்கட்கிழமை- காய்கறி சாம்பாருடன் சாதம், உப்புமா அல்லது ரவா உப்புமா அல்லது சேமியா உப்புமா அல்லது கோதுமை உப்புமா.

செவ்வாய் கிழமை - ரவா கிச்சடி மற்றும் சாமை கிச்சடி, காய்கறி கிச்சடி மற்றும் காய்கறி சாம்பாருடன் வீட் ரவா கிச்சடி.

புதன் கிழமை - ரவா/பொங்கல் பொங்கல் & காய்கறி சாம்பார்.

வியாழக்கிழமை - சாதம் & ரவா உப்புமா, உப்புமா & சாமை, உப்புமா & வீட் ரவா, உப்புமா & ரவா கேசரி, & சமய் கேசரி

வெள்ளிக்கிழமை- ரவா கிச்சடி, சமய் கிச்சடி, மற்றும் காய்கறி கிச்சடி, ரவா கேசரி மற்றும் சமய் கேசரி.

கோட்டைக் கொத்தளத்தில் முதல்வராக, 3வது முறையாக கொடி ஏற்றி வைத்து உரையாற்றியுள்ளார் மு.க.ஸ்டாலின் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்