சென்னை: தமிழ்நாட்டில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மதுரையை மிஞ்சும் அளவிற்கு சென்னையிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக பரவலாக மழை பெய்து வந்தது. இதனால் பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் பெய்த மழையால் வானம் மேக மூட்டத்துடன் குழுமையான சூழல் நிலவி வந்தது.அதே சமயத்தில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரையை ஒட்டி உள்ள பகுதிகளில் பரவலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
இதற்கிடையே தமிழகத்தில் மழையின் அளவு படிப்படியாக குறைந்து தற்போது கோடை வெயில் போலவே வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக சென்னையில் கடந்த ஒரு வாரமாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.இதனால் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் தவிக்கும் நிலையும் உருவாகியுள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டும் எட்டு மாவட்டங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. குறிப்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் 100.7 டிகிரி வெயில் கொளுத்தியது. அதேபோல் அதிகபட்சமாக மதுரையில் 104 டிகிரி வெயில் சுட்டெரித்தது.
கோடைக்காலம் மீண்டும் வந்து விட்டதா என மக்கள் அச்சப்படும் அளவுக்கு மதுரை, சென்னை திருச்சி, தஞ்சாவூர், கரூர், பாளையங்கோட்டை, ஈரோடு, உள்ளிட்ட மாவட்டங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது. மாறாக மாலை நேரங்களில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. பொதுவாகவே புரட்டாசி மாதத்தில் காலநிலை மாற்றம் ஏற்படும். அதிலும் தற்போது பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகவும், மாலை நேரங்களில் குழுமையான சூழலும் நிலவுகிறது. இயற்கையாகவே புரட்டாசி மாதத்தில் மனிதர்களுக்கு ஜீரண சக்தி குறையும் என்பார்கள். அதனால் தான் புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடக்கூடாது என நம் முன்னோர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதற்கிடையில் தற்போது காலநிலை மாற்றத்தால் தற்போது வெயிலின் தாக்கமும் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் வரும் 21ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். அநேக இடங்களில் வறண்ட வானிலையே நிலவக்கூடும். குறிப்பாக தமிழகத்தில் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அப்போது அதிகபட்ச வெப்பநிலை இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் தற்போது நிலவி வரும் வெயிலின் தாக்கத்தால் அதிக வெப்பநிலை நிலவும் மாவட்டங்களின் ஒன்றாக மதுரை ஏற்கனவே சாதனை படைத்தது.இதனை முறியடிக்கும் விதமாக தற்போது சென்னையிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. சாதனையை படைக்கும் அளவுக்கு வெயிலின் தாக்கத்திற்கு இடையே மழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}