சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை கேட் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக ஆளுநர் மாளிகை புதிய டிவீட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
சென்னை கிண்டியில் ராஜ்பவன் உள்ளது. ஆளுநர் மாளிகையான இங்கு நேற்று கருக்கா வினோத் என்ற ரவுடி பெட்ரோல் குண்டை வீசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டார். அவர் வீசிய குண்டு ராஜ்பவன் கேட் மீது விழுந்து வெடித்தது. மற்ற வெடிக்காத 3 குண்டுகளை அங்கிருந்த போலீஸார் மடக்கிப் பிடித்து பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட கருக்கா வினோத் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
கருக்கா வினோத் ஏற்கனவே சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்திக் கைதாகி சிறைக்குப் போனவர். சமீபத்தில்தான் விடுதலையாகி வெளியே வந்தார். வந்தவர், ராஜ்பவன் மீது தாக்குதல் நடத்த முயன்று சிக்கியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஆளுநர் மாளிகை சார்பில் போலீஸில் புகார் தரப்பட்டது. இந்தப் பின்னணியில் தற்போது ஆளுநர் மாளிகை புதிய டிவீட் ஒன்றை போட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ராஜ்பவனின் தாக்குதல் குறித்த புகாரை காவல்துறை பதிவு செய்யவில்லை. தன்னிலையாக பதிவு செய்யப்பட்ட புகார், தாக்குதலை சாதாரண நாசகார செயலாக நீர்த்துப் போகச் செய்து விட்டது. அவசர கதியில் கைது மேற்கொள்ளப்பட்டு மாஜிஸ்திரேட்டை நள்ளிரவில் எழுப்பி குற்றம் சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டு விட்டதால், பின்னணியில் உள்ளவர்களை அம்பலப்படுத்தக் கூடிய விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது. நியாயமான விசாரணை தொடங்கும் முன்பே கொல்லப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பெட்ரோல் குண்டு விவகாரம் தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், ஆளுநர் ஆர். என். ரவியை நேரில் சந்தித்து விளக்கம் அளித்துள்ளனர்.
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}