சென்னை: முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்காக தலா 6 பெட்டிகள் கொண்ட 28 புதிய மெட்ரோ ரயில்களை கொள்முதல் செய்ய மத்திய நிதி மற்றும் பொருளாதார விவாகாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழ்நாடு அரசு மெட்ரோ ரயில் தொடர்பான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் சென்னையில் முதற்கட்டமாக விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை, பரங்கிமலை முதல் சென்ட்ரல் ரயில் நிலையம் வரை என மொத்தம் 54 கிலோ மீட்டர் தொலைவுக்கு தலா 4 பெட்டிகள் கொண்ட 45 மெட்ரோ ரயில்களை இயக்கி வருகின்றது. இதில் தினமும் மூன்று லட்சம் முதல் 3.5 லட்சம் பேர் வரை பயணம் செய்கின்றனர்.
நாளுக்கு நாள் மெட்ரோ ரயிலில் பயணிக்கும், பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி இரு மார்க்கத்திலும் 4 முதல் 5 வரை ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், ஆறு பெட்டிகள் கொண்ட ரயில் பெட்டிகளை கொள்முதல் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.
இத்திட்டம் தொடர்பான விரிவான அறிக்கையை மெட்ரோ நிர்வாகம் தமிழக அரசுக்கு அனுப்பியது. இதற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்தது. இந்த ஒப்புதல் ஆவணத்தினை 2023 ஆகஸ்ட்டில் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. கூடுதலாக தேவைப்படும் ரயில் பெட்டிகளை கணக்கிட்டு ரூபாய் 2,820 கோடி மதிப்பில் 6 பெட்டிகள் கொண்ட 28 மெட்ரோ ரயில்களை கொள்முதல் செய்ய ஜூன் மாதம் நிதி ஆயோக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.
இரு மார்க்கத்திலும் 6 பெட்டிகள் கொண்ட 28 புதிய மெட்ரோ ரயில்களை தயார் செய்ய மத்திய நிதி மற்றும் பொருளாதார விவகாரத்தை ஒப்புதல் அளித்துள்ளதாக மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. வெளிநாட்டு வங்கிக் கடன் உதவியுடன் இந்த ரயில் பெட்டிகள் வாங்கப்படவுள்ளன.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}