சென்னை: தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த ஒரு வாரத்துக்கு மிதமானது முதல் கன மழை வரை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்அளது.
கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் வெயில் வாட்டி எடுத்த நிலையில் வெப்பம் அதிகமாக இருந்தது. பின்னர் மாலை நேரங்களில் கருமேகம் சூழ்ந்து குளிர்ச்சி நிலவி வந்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இந்நிலையில் இன்று நீலகிரி, கோவை ,தேனி ,திருப்பூர் ,திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு ஆகிய 15 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வேலூர் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என அறிவித்துள்ளது. சென்னையில் காலை முதல் வெயில் வெளுத்து வந்தது. ஆனால் பிற்பகலுக்கு மேல் வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்படுகிறது. மாலைக்கு மேல் மழை வருமா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.
எப்போது வட கிழக்குப் பருவ மழை
இதற்கிடையே, அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் லேசானது முதல் கன மழை வரை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென் மேற்கு பருவ மழை மெல்ல மெல்ல விடை பெறப் போவதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதேசமயம், வட கிழக்குப் பருவ மழை எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அக்டோபர் 3 வாரத்துக்கு மேல்தான் வட கிழக்குப் பருவ மழை தொடங்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றன. இந்த மழைதான் தமிழ்நாட்டுக்குப் பெரிய அளவில் மழையைக் கொண்டு வந்து தரும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர். குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் காத்துக் கிடக்கின்றன.
ஆருத்ரா தரிசனம் எப்ப வருது தெரியுமா.. அதோட முக்கியத்துவம் என்னன்னு தெரியுமா?
சீனாவின் மகா மதில்.. உலக அதிசயங்கள் (தொடர்)
முதல்ல என்னை நான் பார்த்துக்கறேன்.. The promises make to my own soul
புதிய வாக்காளர்களுக்கு புது டிசைனில் அடையாள அட்டைகள்: தேர்தல் ஆணையம் தகவல்
கோனோ கார்பஸ் மரத்துக்கு தடாலடியாக தடை விதித்த தமிழ்நாடு அரசு.. காரணம் இதுதான்!
நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்....தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடி சரிவு
நீ பார்த்த பார்வை.. When I looked into your eyes!
ஒரே நாளில் உருவானதல்ல.. ரோம சாம்ராஜ்ஜியம்.. ROME WASN'T BUILT IN A DAY
Vaikunda Ekadashi: சொர்க்கவாசல் நாயகனே.. கோவிந்தா கோவிந்தா!
{{comments.comment}}