தமிழக பாஜக தலைவர் நியமனம் எப்போது?.. 11 ஆம் தேதி அன்று தெரியும்!

Apr 05, 2025,05:01 PM IST

சென்னை: தமிழக பாஜக மாநில தலைவர் தொடர்பான  அறிவிப்புகளை வெளியிட தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய இணை அமைச்சருமான கிஷன் ரெட்டி தமிழகத்திற்கு ஏப்ரல் ஒன்பதாம் தேதிக்கு பதிலாக, 11-ம் தேதி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 



2026 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வதற்காக பாஜக, கூட்டணி குறித்த முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே அதிமுகவுடன் கூட்டணி முறிவை சந்தித்த பாஜக, மீண்டும்  பேச்சுவார்த்தையில் இணக்கம் ஏற்பட்டு பாஜக அதிமுக இடையான கூட்டணி உறுதியானதாக தெரிகிறது. 




ஆனால் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை இதற்கு மறுப்பு தெரிவிப்பதாகவும், இதனால் இப்பதவியிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ள இருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. ‌இதனிடையே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாநில தலைமை பதவியில் இருந்து தன்னை விடுவிப்பதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அந்த இடம் காலியானதாக இருந்த நிலையில், அந்த பதவிக்கு யார் பொருத்தமானவர் என்பது தொடர்பாக பேசப்பட்டு வருகிறது.


இந்த நிலையில் மாநில தலைமையில் மாற்றம் செய்ய பாஜக முடிவு செய்துள்ளது. அதன்படி தமிழக பாஜக புதிய தலைவரை தேர்வு  செய்வது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்க தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய இணை அமைச்சருமான கிஷன் ரெட்டி ஏப்ரல் ஒன்பதாம் தேதி தமிழகத்திற்கு வருகை தர இருப்பதாக ஏற்கனவே பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது கிஷன் ரெட்டியின் தமிழக வருகை தள்ளிப் போகிறது. அதாவது ஏப்ரல் 9 தேதிக்கு பதிலாக ஏப்ரல் 11ஆம் தேதி  வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அடுத்து யார் தமிழக பாஜக மாநில தலைவர் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Destination Maldives.. போவோமா ஊர்கோலம்.. அதுவும் நம்ம பட்ஜெட்டுக்குள்.. மாலத்தீவுக்கு!

news

சென்னையில் ரூ.39 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்... அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

பனியும் கொட்டுது.. மழையும் பெய்யுது.. அப்படியே மூக்கும் ஒழுகுதா.. இந்தாங்க பாட்டி வைத்தியம்!

news

Political Maturity on cards?.. கே.ஏ.செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் பயணிக்குமா த‌வெக?

news

அதிமுக - பாஜக கூட்டணியை கண்டு திமுக நடுக்கிப்போயுள்ளது: ஆர்.பி.உதயகுமார் பேட்டி

news

மார்கழித் திங்கள் அல்லவா.. மதி கொஞ்சும் நாள் அல்லவா.. மார்கழி மாத சிறப்புகள்!

news

தங்கம் விலை நேற்று புதிய உச்சம் தொட்ட நிலையில் இன்று சற்று குறைவு!

news

ஜோர்டானில் பிரதமர் நரேந்திர மோடி.. 2 நாள் சுற்றுப்பயணத்தில் என்னவெல்லாம் காத்திருக்கு?

news

365 நாட்களும் கவிதை.. வீடு தேடி வரும் சான்டாவின் சர்ப்பிரைஸ் பரிசுகள்.. கலக்கும் Creative Writers

அதிகம் பார்க்கும் செய்திகள்