மோடியை அப்பாவாக பார்த்தேன்.. துரோகம் செய்த பாஜகவுக்கு நன்றி.. காயத்ரி ரகுராம் ஆவேசம்

Jan 14, 2023,10:47 AM IST
சென்னை: துரோகம் செய்த பாஜகவுக்கு நன்றி. நான் பிரதமர் நரேந்திர மோடியை அப்பாவாக பார்த்தேன்.. ஆனால் எனக்கு பாஜக பாதுகாப்பு தர மறுத்து விட்டது என்று நடிகை காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.



நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் ஆவேசமாக கூறியிருப்பதாவது:

என் தொழிலைக் கெடுத்ததற்கு நன்றி. என் பெயரைக் கெடுத்ததற்கு நன்றி. என் பெண்மையை அவமானப்படுத்தியதற்கு நன்றி.  என்னை மானபங்கம் செய்ததற்கு நன்றி. என் 8 வருட சேவை, கடின உழைப்பு மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டதற்கு நன்றி.  எல்லாவற்றையும் பறித்த பிறகு என்னைத் தூக்கி எறிந்ததற்கு ஒரு பெரிய நன்றி.

என்னால் திரும்பக் கொண்டு வர முடியாத இளமைக் காலத்தை பறித்ததற்கு நன்றி. என் தனிப்பட்ட வாழ்க்கையை பறித்ததற்கு நன்றி. பாதுகாப்பை தராததற்கு நன்றி. எனக்கு துரோகம் செய்த பாஜகவுக்கு நன்றி. நீதி வழங்காததற்கு மிக்க நன்றி.

கடவுள் உங்களைப் பார்த்துக் கொள்வார். நீங்கள் அனைவரும் என்னிடம் செய்தது தவறு என்பதை தமிழ்நாடு மக்கள் உங்களுக்கு பதில் சொல்வார்கள். நான் என் தர்மத்தை நிலை நாட்டுவேன். விரைவில் களத்தில் சந்திப்போம் என்று காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.

மோடியை அப்பாவாக நினைத்தாகவும் அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

பாமகவின் பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு: 341 யோசனைகளை முன்வைத்த அன்புமணி

news

ஜூலை 31 முதல் தமிழ்நாடு முழுவதும் கறிக் கோழி விற்பனை நிறுத்தம்

news

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது உண்மையா? புரளியா? நயினார் நாகேந்திரன் கேள்வி

news

நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது தாக்குதல்: உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

news

தஞ்சையில் திருமுறை இசை வெளியீட்டு விழா: ஆகஸ்ட் 7-ல் கோலாகலமாக நடைபெறுகிறது!

news

உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

news

தேர்வு முறைகேடு தடுப்பு சட்டத்திருத்த மசோதா: எதிர்க்கட்சிகளின் அமளிக்கிடையே தாக்கல்

news

டெல்லி போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்... நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தர்ணா

news

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க அனுமதி

அதிகம் பார்க்கும் செய்திகள்