சென்னை : அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பை சரண் செய்து, பணப் பலன் பெறும் முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
2025-2026ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை இன்று தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பல்வேறு துறைகள் மற்றும் திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதி குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்த அமைச்சர், இறுதியாக அறிவிப்புகள் சிலவற்றை வெளியிட்டார். அதில் மிக முக்கியமான தமிழக அரசு ஊழியர்களுக்கு விடுப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது, கொரோனா தொற்று காலத்தில் நிறுத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்புகளை சரண் செய்து, பணப் பலன் பெறும் முறை நிறுத்தப்பட்டது. இந்த முறை மீண்டும் அமல்படுத்தப்பட உள்ளதாக இன்றைய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது தெரிவித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, ஈட்டிய விடுப்பு சரண் தொடர்பாக தொடர்ந்து கோரிக்கை எழுந்து வந்தது. இதை பரிசீலித்து முதல்வர் வழிகாட்டுதலின் பேரில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பு நாட்களில் 15 நாட்கள் வரை விடுப்பை சரண் செய்து பணம் பெறும் பலன் மீண்டும் கொண்டு வரப்பட உள்ளது.
இந்த முறை 2026ம் ஆண்டு ஏப்ரல் 01ம் தேதி முதல் சரண் செய்து பணப் பலன் பெற்றுக் கொள்ளும் முறை செயல்படுத்தப்படும். இது தொடர்பாக விரைவில் அரசாணை வெளியிடப்படும். இதனால் 9 லட்சம் அரசு ஊழியர்கள் பலன் பெறுவார்கள் என தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தரப்பில் பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக போராட்டங்களும் நடைபெற்றுள்ளன. இந்த நிலையில் அதில் ஒரு கோரிக்கையை தற்போது அரசு ஏற்றுள்ளது.
கனிமொழி தலைமையில்... திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைப்பு!
2026 ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு
ஐபிஎஸ் 2026க்கு பிறகு தோனி ஓய்வா?...கிரிக்கெட் பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல்
டெல்லியில் கட்டாயமாகிறது work from home...ஊழியர்கள் மகிழ்ச்சி
அமைதியாகவே இருந்தால் எப்படி? ஏதாவது சொல்லுங்க...விஜய்யை விளாசிய அண்ணாமலை
குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கலான சாந்தி மசோதா...காங்கிரஸ், திமுக கடும் எதிர்ப்பு
ஆஸ்கார் 2026 ஷார்ட்லிஸ்ட் வெளியானது...பட்டியலில் இடம்பிடித்த ஒரே ஒரு இந்திய படம்
விஜய் பேசக்கூடிய இடத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பாதுகாப்பு அரண் செய்யப்பட்டுள்ளன: செங்கோட்டையன்
True love has no expiry date.. உண்மைதானே.. காதலுக்கு எக்ஸ்பைரி வைக்க முடியுமா!!
{{comments.comment}}